முந்தய பக்கம்

விவசாயிகளின் போராட்ட அறிவிப்பால் கொள்முதல்நிலையம் திறக்க முடிவு

12 Dec 2025, 3:12 pm
விவசாயிகளின் போராட்ட அறிவிப்பால் கொள்முதல்நிலையம் திறக்க முடிவு
<p>கள்ளக்குறிச்சி,டிச.12 &ndash; உளுந்தூர்பேட்டை ஒன்றியம்( கிழக்கு) ம.குன்னத்தூர் பகுதியில் -25 கிராமங்கள் பயன் பெரும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு &nbsp;கள்ளக்குறிச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டலஅலுவலகத்தில் முதுநிலை மண்டல மேலாளர் மு.வசந்தலட்சுமி தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் டி.ஏழுமலை, ஒன்றிய தலைவர் பி.தணிகாசலம், செயலாளர் ஆர்.சீனுவாசன், &nbsp;பொருளாளர் சி.ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் பி.கொடியான், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஜோதிராமன்,அருள்தாஸ், தெய்வீகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ம.குன்னத்தூர் &nbsp;பகுதியில் களஆய்வு செய்து நேரடி கொள்முதல் நிலையம் திறப்பது என முடிவு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram