தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 Nov 2025, 2:46 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை அடையாள அணி வகுப்பு நடத்த முடிவு

கோவை, நவ.10- கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசாரால் சுட்டு பிடிக்கப் பட்ட மூன்று பேரையும் மாணவி முன்பு அடையாள அணி  வகுப்பு நடத்த போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளனர். கோவை விமான நிலையம் அருகே கடந்த நவ.2 ஆம்  தேதி இரவு காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டி ருந்த கல்லூரி மாணவியை, மது போதையில் வந்த  மூன்று பேர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்ப திவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து, மூவரையும்  தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப் படையில், துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு அருகே பதுங்கியிருந்த சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ்  என்கிற கருப்புசாமி (30), குணா என்கிற தவசி (20)  மற்றும் மதுரையைச் சேர்ந்த கார்த்தி என்கிற காளீஸ்வ ரன் (21) ஆகிய மூவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இவர்களை நவ.13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவ லிக்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், மூவரையும் பாதிக்கப்பட்ட மாணவி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பீள மேடு போலீசார் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்ற அனு மதி கிடைத்தபின், அடையாள அணிவகுப்பு நடைபெற வுள்ளது.

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு

ஈரோடு, நவ.10- பவானியில் கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு  பிறகு மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் உள்ள லட்சுமி நகரில், சேலம் – கொச்சின் நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ், ஆந்திராவைச் சேர்ந்த  கூலி தொழிலாளர் தம்பதி வெங்கடேஷ் - கீர்த்தனா வசித்து வந்தனர். இவர்களது ஒன்றரை வயது பெண்  குழந்தை வந்தனா, கடந்த அக்.16 ஆம் தேதி அன்று நள்ளி ரவில் மாயமானது. பாலத்திற்கு அடியில் கொசு வலை  போர்த்தி கொண்டு குடும்பத்துடன் உறங்கி கொண்டி ருந்தனர். திடீரென விழித்து பார்த்த போது குழந்தை யை காணவில்லை. இதையறிந்து பெற்றோர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுவட்டாரத்தில் பல இடங்க ளில் தேடிப் பார்த்தனர். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் உறங்கி கொண்டிருந்த இடத்தை கவனித்த  போது, கொசு வலை கிழிந்திருந்தது தெரிய வந்தது.  எனவே, கொசு வலையை கத்தியால் கிழித்து, அதன் வழி யே குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என்று  சந்தேகித்தனர். பின்னர் போலீசில் புகார் தெரிவித்த னர். இதையடுத்து போலீசார் அப்பகுதியை சேர்ந்த வர்களிடம் விசாரித்த போது, மூன்று பேர் நள்ளிரவில் வந்து சென்றது தெரிய வந்தது. அவர்கள் தான் ஒன்ற ரை வயது பெண் குழந்தையை கடத்தி சென்றிருக்கக் கூடும் என்று போலீசார் கருதினர். இதுதொடர்பாக சித் தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த அக்.16 ஆம்  தேதி கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு பிறகு  மீட்கப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தையை நாமக்கல் லில் போலீசார் பத்திரமாக மீட்டனர். குழந்தை கடத்தல் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை சேலம், நவ.10- 100 நாள் வேலை திட்டப்பணிகளை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஆனையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆனையம்பட்டி புதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில ஆண்டு களாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்,  100 நாள் வேலை முறையாக வழங்கவில்லை என கூறப்ப டுகிறது. அதேபோல், அப்பகுதியில் முறையாக குடிநீ ரும் வழங்கவில்லை. இதனால் அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது  போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படை யில், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால், அதிகாரிகள் யாரும் நேரில் வராததால், பெண் கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால் அலுவ லகத்தில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மனைபட்டா வழங்கக்கோரி மனு

தருமபுரி, நவ.10- நீண்ட ஆண்டுகாலம் வீடு கட்டி குடியிருந்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மனைபட்டா வழங்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் முழுவதும் 50  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண் டம் செய்யும் தொழிலாளர் குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இவர் களில் பெரும்பாலோனோர் வறு மைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். விவசாய நிலம் இல்லை; பலருக்கு வீடு இல்லை. பல ஆண்டுகாலம் வீடு கட்டி குடியிருப்போருக்கு வீட்டு மனைபட்டா இல்லை. வீடு  இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். மண்பாண் டத் தொழிலாளர்களின் நலன் கருதி,  பொங்கல் திருநாளில் அரசு சார்பில்  அரிசி, பருப்பு, கரும்பு, சர்க்கரை, வேட்டி, புடவை வழங்குவதுபோல, மண்பானையும், அடுப்பும் வழங்க  வேண்டும் என கடந்த 5 ஆண்டுக ளாக வலியுறுத்தி வருகின்றனர். என வே, தமிழக அரசு இந்தாண்டாவது மண்பானை, அடுப்புகளை கொள் முதல் செய்து வழங்க வேண்டும். பரு வமழை பெய்கின்ற அந்த காலங்க ளில் மண்பாண்டத் தொழிலாளர் கள் மண்பாண்டத் தொழில் செய்ய  முடியாத நிலை ஏற்படுகிறது. இத னை கருத்தில் கொண்டு மழைக்கால நிவாரண உதவித்தொகையாக மண்டபாண்டத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. மண்பாண்டத் தொழிலளார்கள் நல வாரியத்தில் பதிவு செய்திட்ட அத் தனை தொழிலாளர்கள் குடும்பங்க ளுக்கும் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி  வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக வசித்து வரு கின்ற வீட்டிற்கும் அவர்கள் தொழில் செய்யும் இடத்திற்கும் அடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி தருமபுரி ஆட்சியரிடம் தொழி லாளர்கள் மனு அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.