தனியார் பேருந்து கட்டண உயர்வு டிச.30-க்குள் முடிவு எடுக்கப்படும்!
14 Nov 2025, 1:26 pm
<p><strong>தனியார் பேருந்து கட்டண உயர்வு டிச.30-க்குள் முடிவு எடுக்கப்படும்!</strong></p>
<p>சென்னை, நவ.14 - தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர் கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் தாக்கல் செய்திருந்த மனுவில், “டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண பாஸ்கள் உள்ளிட்ட பல காரணிகளால் பேருந்து கட்ட ணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்ததாக” குறிப்பிட்டிருந்தார். அந்த கோரிக்கை மனுவின் அடிப் படையில், தனியார் பேருந்து கட்ட ணத்தை மாற்றியமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். 2024 டிசம்பர் 6ஆம் தேதி பிறப்பிக் கப்பட்ட அரசாணைப்படி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலை மைச் செயலாளர், நிதித்துறை முதன் மைச் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டதாக வும், தனியார் பேருந்து உரிமை யாளர்களுடனான கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது என்றும் மனு தாரர் குறிப்பிட்டிருந்தார். தனியார் பேருந்து உரிமையாளர்களின் கருத்து களை அனுப்பச் சொன்ன நிலை யில், அதன் பின்னர் எந்த நடவடிக்கை யும் இல்லை என்று மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாரா யணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜஹான் ஆகியோர் ஆஜராகி, இதுவரை 950 பரிந்துரை கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கான கூட்டத்தை நடத்தி, இறுதி உத்தரவு டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் பிறப்பிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் இருவரும் உறுதி யளித்தனர். அரசின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத் ததுடன், அரசு எடுக்கும் இறுதி முடிவை 2026 ஜனவரி 6 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.</p>
