நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் டிசம்பர் 29: பி.எப். குறைதீர் கூட்டம்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் டிசம்பர் 29: பி.எப். குறைதீர் கூட்டம்</strong></p>
<p><strong>திருநெல்வேலி: </strong>நெல்லை, தென்காசி, துாத்துக்குடி யில் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை நடக்கிறது. இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் -1 சிவ சண்முகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (பிஎப்.,) சார்பில் ‘வருங்கால மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழ கம் ( இ.எஸ்.ஐ.,) வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 நிகழ்ச்சி’ நெல்லை, தென்காசி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் 29ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லுார், ஐன்ஸ்டீன் பொறி யியல கல்லுலூரியிலும், தென்காசி மாவட்டம், வாசுதேவ நல்லுார், சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியிலும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள்,தொ ழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள்,தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
