மறைந்த ஆசிரியரின் குடும்பம் நெகிழ்ச்சி அரசுப் பள்ளிக்கு 1.27 ஏக்கர் நிலம் தானம்!
16 May 2026, 2:01 am
<p><strong>மறைந்த ஆசிரியரின் குடும்பம் நெகிழ்ச்சி அரசுப் பள்ளிக்கு 1.27 ஏக்கர் நிலம் தானம்!</strong></p><p>உளுந்தூர்பேட்டை, மே 15- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள காட்டுஎடையார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறைகள் கட்ட ஒரு குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 27 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி யுள்ளனர். சோழவாண்டிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி யாற்றி மறைந்த சிவராமகிருஷ்ணன் என்ப வரின் குடும்பத்தினரே இந்த உன்னத செயலைச் செய்துள்ளனர். இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டடங்கள் கட்ட இடமில்லாமல் இருந்தது. இதையறிந்த சிவராமகிருஷ்ணனின் தாயார் பத்மாவதி, மனைவி நர்மதா, சகோதரர் நாகராஜன் மற்றும் சகோதரி சிவகாமசுந்தரி ஆகி யோர், தங்களுக்குச் சொந்தமான நிலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் கார்திகாவிடம் தானமாக எழுதி வழங்கினர். மறைந்த ஆசிரியரின் குடும்பத்தினர் காட்டிய இந்தத் தாராள மனப்பான்மையைக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.</p>
