முந்தய பக்கம்

டிச.24-விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட்

22 Dec 2025, 2:53 pm
டிச.24-விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட்
<p><strong>டிச.24-விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட்</strong></p> <p>சென்னை, டிச.22 - எல்.வி.எம்.3-எம்6 &nbsp;என்பது இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறு வனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த, கனரக ஏவுதள ராக்கெட் ஆகும். இது டிசம்பர் 24 அன்று அமெரிக் காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ் மொபைல் நிறுவனத்தின் ப்ளூபர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது. அமெரிக்காவின் 6.5 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இது இஸ்ரோவின் ஆறாவது எல்விஎம்3 ராக்கெட் இயங்கு தல் பணி. குறைந்த புவி சுற்றுப் பாதையில் மிகப்பெரிய மற்றும் கனமான செயற்கைக்கோளை வைக்கும். மேலும், இந்தியாவின் விண்வெளித் துறையில் வணிக ரீதியான வளர்ச்சியையும், எதிர்கால மனித விண்வெளிப் பயண ககன்யான் திட்டத்திற்கான தொழில்நுட்ப வளர்ச்சியையும் குறிக்கிறது. இந்த பணியின் முக்கிய அம்சங்கள், வணிகரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவுதல், சதீஷ் தவான் &nbsp;விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா இரண்டாம் ஏவுதளத்தில் &nbsp;இருந்து டிசம்பர் 24 அன்று காலை 8.54 மணிக்கு இந்திய நேரப்படி ஏவப்படுகிறது. &nbsp;இதன் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் என்பது, உல களாவிய மொபைல் போன்களுக்கு நேரடியாக பிராட் பேண்ட் இணைப்பை வழங்கும் செயற்கைக்கோளை நிலை நிறுத்துகிறது. உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதல் சந்தையில் இந்தியாவின் திறனையும், பங்களிப்பையும் இது &nbsp;அதிகரிக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் எல்விஎம்3-எம்6 ராக்கெட் ஏவப்படுவ தால் டிசம்பர் 24 அன்று பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் &nbsp;செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram