தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவள்ளூர் ஆட்சியரைக் கண்டித்து டிச. 1 உண்ணாநிலை போராட்டம் மீனவ கிராமங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

25 Nov 2025, 3:29 pm
திருவள்ளூர் ஆட்சியரைக் கண்டித்து  டிச. 1 உண்ணாநிலை போராட்டம் மீனவ கிராமங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
<p><strong>திருவள்ளூர் ஆட்சியரைக் கண்டித்து&nbsp;டிச. 1 உண்ணாநிலை போராட்டம் மீனவ கிராமங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு</strong></p> <p>திருவள்ளூர், நவ.25 &ndash; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மனு கொடுக்க வந்த மீனவ கிராம நிர்வாகிகளை &lsquo;கெட் அவுட்&rsquo; எனக் கூறி இழிவுபடுத்தியதைக் கண்டித்து, வருகின்ற டிச.1 பழவேற்காடு பேருந்து நிலையத்தில் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் என 50 மீனவ கிராமங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்பும் நாட்கள் அதிகரித்துள்ளதால், மீன்பிடிக்கச் செல்ல முடியா மல் வாழ்வாதாரம் இழக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கோரியும், அரசு மதுபானக் கடையை இடம் மாற்றுவது குறித்தும் பேசுவதற்காக மீனவப் பிரதிநிதிகள் நவ.21 அன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். அப்போது அவர் இழிவுபடுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், ராக்கெட் ஏவுதலால் ஏற்படும் நஷ்ட ஈடு, பழவேற்காடு மக்க ளின் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படும் வனத்துறையைக் கண்டிப்பது, மதுபானக் கடையை இடம் மாற்றுதல் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தியும் பழவேற்காடு 50 மீனவ கிராமக் கூட்டமைப்பு சார்பில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தின் முடிவாக டிச.1 உண்ணாநிலை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.