தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிச.8 ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சம்மேளனம் மறியல் - போராட்டம்

15 Nov 2025, 4:09 pm
டிச.8 ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சம்மேளனம் மறியல் - போராட்டம்
<p><strong>டிச.8 ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை&nbsp; ஊழியர் சம்மேளனம் மறியல் - போராட்டம்</strong></p> <p>கரூர், நவ.15 - &nbsp;தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சம்மே ளன மாநில நிர்வாகிகள் கூட்டம் &nbsp;வெள்ளியன்று கரூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு, சம்மேளனத்தின் மாநில உதவித் தலைவர் பொன். கிருஷ்ணன் தலைமை வகித்தார். கரூர் மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசி னார். சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், சிஐ டியு மாநிலச் செயலாளர் கே. &nbsp;ரங்கராஜன், சம்மேளன பொதுச் செயலாளர் ஆர். பாலசுப்பிர மணியன் மற்றும் மாநில நிர்வாகி கள் கலந்து கொண்டனர். &nbsp;தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பணிகளில் தனியார்மய கொள் கையை கைவிட வேண்டும். தனி யார்மய அரசாணையை தமிழக அரசும், நகராட்சி நிர்வாகமும் திரும்பப் பெற வேண்டும் என்பன &nbsp;உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி, தமி ழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக &nbsp;வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சம்மேளனத்தின் சார்பில் &nbsp;அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் டிசம்பர் 8 ஆம் தேதி வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. &nbsp;மேலும், இந்த மறியல்-வேலை நிறுத்தப் போராட்டத்தில், மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத் துப் பிரிவு தொழிலாளர்களும் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.