உப்புத் தொழிலாளர்களின் தலைவர் தோழர் மு.செல்லத்துரை மறைவு
24 May 2026, 10:29 pm

உப்புத் தொழிலாளர்களின் தலைவர் தோழர் மு.செல்லத்துரை மறைவு

தூத்துக்குடி, மே 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி புற நகர்க் குழு உறுப்பினரும், சிஐடியு உப்பு தொழிலாளர் சங்கத்தின் மூத்த தலைவரு மான தோழர் மு.செல்ல துரை (85) பழைய காயலில் காலமானார்.

அவரது மறை விற்குச் சிபிஐ(எம்) மற்றும் சிஐடியு தலைவர்கள் தங்க ளது செவ்வணக்கத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரி வித்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மகத்தான பணி தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் மஞ்சநீர் காய லில் முத்து - சிவனந்தம்மாள் தம்பதியினருக்கு 1941-இல் பிறந்த செல்லத்துரை, தனது இளம் வயதிலேயே கம்யூ னிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

கடந்த 1961-ஆம் ஆண்டு சுதந்திரப் போ ராட்டத் தியாகியும், கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மகத் தான தலைவருமான டி.ஆர். சுப்பிரமணியன், தலைவர் கள் சங்கரநாராயணன், தியாகி பொண்ணு கோடாங்கி (என்ற சண்முகவேல்) ஆகி யோரால் ஈர்க்கப்பட்டு, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாள ராகப் பணியாற்றினார்.

தொ டர்ந்து 1964-இல் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதய மான போது, கட்சியின் கிளைச் செயலாளராகவும், தூத்துக்குடி புறநகர்க் குழு உறுப்பினராகவும் இறுதி வரை அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

தொழிலாளர் மற்றும் மக்கள் நலப் போராட்டங்கள் சிஐடியு உப்பு தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட நிர் வாகியாகப் பொறுப்பு வகித்த தோழர் செல்லத் துரை, தொழிலாளர்களின் கூலி உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளுக் காகப் பல்வேறு அடக்கு முறைகளை எதிர்கொண்டு போராட்டங்களை முன் னின்று நடத்தியுள்ளார்.

மேலும், பழைய காயல் பகுதியில் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர், குளங்களைச் சீரமைத்தல் மற்றும் விவசாயப் பொருட் களுக்கு நியாயமான விலை கிடைக்கப் பல்வேறு இயக் கங்களை நடத்தினார்.

கடந்த 1991 உள்ளாட் சித் தேர்தலில் பழையகா யல் ஊராட்சி மன்ற உறுப்பி னராகத் தேர்வு செய்யப் பட்டு, திருவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடி நீர், சாலை வசதி, தெரு விளக்கு, போக்குவரத்து மற்றும் சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்ப தில் மகத்தான பங்காற்றி னார்.

அனைத்துத் தரப்பு மக்களின் அன்பைப் பெற்ற தோழர் செல்லத்துரைக்கு மூக்கம்மாள் என்ற மனைவி யும், இரண்டு மகன்களும், ஒரு மகளும், பேரப்பிள் ளைகளும் உள்ளனர்.

அவரது மறைவிற்கு கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளர் ரசல் மற்றும் சிஐடியு மாவட்டக் குழு சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்க லும், குடும்பத்தினருக்கான ஆறுதலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.