கணக்கம்பாளையம் பள்ளி மாணவர் மரணம்: இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>கணக்கம்பாளையம் பள்ளி மாணவர் மரணம்: இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல்</strong></p>
<p>திருப்பூர், பிப்.18- கணக்கம்பாளையம் பள்ளி மாண வர் தீபக் மரணத்தில் சந்தேகம் இருப்ப தாக கூறி திருப்பூர் அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனை முன்பு புதனன்று உறவினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் கணக்கம்பா ளையம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்த தீபக் என்ற மாணவன் செவ்வாயன்று உணவு இடைவேளையின்போது திடீ ரென மூக்கில் நுரை தள்ளி வகுப்பறை யிலேயே மயங்கி விழுந்துள்ளார். ஆசிரி யர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியி லேயே மாணவன் பரிதாபமாக உயி ரிழந்து விட்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்ப தாக தீபக்கின் பெற்றோர் தெரிவித்தி ருந்தனர். இந்நிலையில் புதனன்று சந் தேகத்தின் அடிப்படையில் மாணவ ரின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்து விட்டனர். மேலும், முறையான விசாரணை மேற்கொள்ள கூறி உறவி னர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனை முன்பு சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் விமல்ராஜ், செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட மாணவர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டு தனியார் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கி டையில் காவல் துறையினருடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.</p>
