‘உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்கு சாவுமணி’
26 Nov 2025, 4:29 pm
<p><strong>‘உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்கு சாவுமணி’</strong></p>
<p>கோவை, நவ.26- தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்கள் மூலம், உழைப்பாளி மக்க ளின் உரிமைகளுக்கு சாவுமணி அடிக் கப்பட்டுள்ளதென, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வி.சுரேஷ் தெரி வித்தார். ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, தற் போது நடைமுறைப்படுத்தியுள்ள தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங் களை எதிர்த்து புதனன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை - திருச்சி சாலையில் உள்ள கோவை கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கோட்டத் தலைவர் பி.வி.குமார் தலைமை வகித்தார். இதில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலா ளர் வி.சுரேஷ் கண்டன உரையாற்றுகை யில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யிருக்கக்கூடிய உரிமைகளை மறுக் கின்றதாக இந்த நான்கு தொகுப்பு சட்டங்களும் உள்ளது. ஒவ்வொரு சலு கையும் யாருடைய கருணையினா லோ, தயவினாலோ பெற்றதல்ல. ஒவ் வொன்றுக்கும் பின்னால் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இவையெல் லாம், எண்ணற்ற நம்முடைய தோழர் கள் செய்திருக்கக்கூடிய தியாகத்திலி ருந்து உருவாக்கப்பட்டது. இந்த சட்டங் கள் மூலம் எப்போது வேண்டுமானா லும் ஒரு ஊழியரை வெளியேற்றி விட லாம். இதுவரைக்கும் 100 தொழிலாளர் களுக்கு மேல் இருக்கக்கூடிய நிறுவ னங்களில் எந்த நடவடிக்கை எடுத்தா லும், அவற்றை தடுக்க பாதுகாப்புக்கு ரிய சரத்துகள் இருந்தன. அதை தற் போது 300 பேர் என மாற்றியுள்ளார்கள். அதனால், இந்திய நாட்டினுடைய 90% தொழிற்சாலைகள் இந்த சட்டத்துக் குள்ளேயே வராது. கடைக்கோடியில் இருக்கக்கூடிய சாமானிய மக்களுக் கும் பாதுகாப்பை தருகிற, அரசியல மைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரி மைகளை பறித்திருக்கிற கருப்பு சட்ட மாக இந்த தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மாறி நிற்கிறது. தொழிலா ளர்களுக்கான எந்த உரிமையும், இனி நீதிமன்றங்கள் மூலம் கிடைக்கும் என்கிற இடத்திலே இல்லை. இந்த தேசத்தினுடைய உழைப்பாளி மக்களு டைய எல்லா உரிமைகளுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டிருக்கிறது. உரிமை களையும் சலுகைகளையும் அனுபவித் துக் கொண்டிருக்கிற கடைசி தலை முறைகளாக நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். இந்த தொழிலாளர் சட்டங் களை எதிர்த்து முறியடிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது, என்றார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல பொது இன் சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் எஸ்.வி.சங்கர், கோட்டச் செயலாளர் கே.துளசிதரன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.</p>
