சென்னை விரைவு செய்திகள்
1 Apr 2026, 4:02 pm

ராணுவ ஆள்சேர்ப்பு விண்ணப்பிக்க ஏப்.10 வரை கால அவகாசம்

சென்னை, ஏப்.1- இந்திய ராணுவத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான ஆள்சேர்ப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 13 முதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக 2026 ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் முடி வடைய இருந்த இப்பதிவு காலம், தற்போது ஏப்ரல் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்ப தாரர்கள் www.joinindi anarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டு ள்ளது, இதனை ஆன்லைன் முறையிலேயே செலுத்தலாம். இத்தேர்வு முறையானது முதலில் ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து உடற்தகுதி, மருத்துவப் பரி சோதனைகள் என்ற அடிப்படையில் அமை யும். கடைசி நேரத் தொழில் நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க, விண்ணப்பதாரர் கள் முன்கூட்டியே பதிவை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். இது குறித்த கூடுதல் சந்தே கங்களுக்கு சென்னை கோட்டை செயின்ட் ஜார்ஜ் வளாகத்தில் உள்ள மண்டல ஆள்சேர்ப்பு அலு வலகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னையிலிருந்து 2,257 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை, ஏப்.1- புனித வெள்ளியை முன்னிட்டு வரும் மூன்று நாள் தொடர் விடுமுறையை ஒட்டி, பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 2,257 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவைக்கும், கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு, ஓசூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கும், மாதவரத்திலிருந்து இதர பகுதிகளுக்கும் என வியாழன் முதல் சனி வரை தனித்தனியாகப் பேருந்துகள் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 735 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

புதுச்சேரி: தேர்வு அட்டவணை மாற்றத்திற்கு மாணவர் சங்கம் எதிர்ப்பு புதுச்சேரி, ஏப். 1- தேர்வு முன்கூட்டியே நடைபெறும் என்ற அறிவிப்பைப் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஸ்டீபன் ராஜ் மற்றும் செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக் கையில், தேர்வுகளை முன்கூட்டியே நடத்துதல் மற்றும் விடுமுறை நாட்களிலும் கட்டாய வகுப்புகளை நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. இது நிர்வாகத் தோல்வி யின் அடையாளமாகும். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே தேவையற்ற பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, பிற மாநிலங்களில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள் குறுகிய காலத்தில் பயணச்சீட்டுகளைப் பெற முடியாமல் அவதிப்படுவதோடு, கூடுதல் பயணச் செலவுகளையும் ஏற்க வேண்டியுள்ளது. மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அட்டவணை மாற்றத்தால் மாணவர்கள் தங்கள் வாக்குரிமையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் ஜனநாயக உரி மையைப் பறிக்கும் இந்த முடிவைக் கைவிட்டு, பழைய தேர்வு அட்டவணையையே நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி: 100 விழுக்காடு வாக்குப்பதிவு விழிப்புணர்வு கள்ளக்குறிச்சி, ஏப். 1 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் புதன்கிழமை(ஏப்.1) தொடங்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசு கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணி ராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஈசிஆர் உயர்மட்டச் சாலை: 430 இடங்களில் மண் பரிசோதனை தீவிரம் சென்னை, ஏப். 1- சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மி யூர் முதல் உத்தண்டி வரை 13.5 கி.மீ தூரத்திற்கு ரூ.2,100 கோடியில் அமையவுள்ள நான்கு வழி உயர்மட்டச் சாலைக்கான முதற்கட்ட மண் பரிசோதனைப் பணி கள் தொடங்கியுள்ளன. இதற்காக இஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்மட்டச் சாலையின் தூண்கள் அமையவுள்ள 430 இடங்களில், தலா 25 மீட்டர் ஆழம் வரை துளையிட்டு மண் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மணல், களிமண் மற்றும் பாறை அடுக்குகளின் தன்மையைப் பொறுத்து தூண்களின் அடித்தளம் வடிவமைக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர். தற்போது 6 இயந்திரங்கள் மூலம் நடைபெறும் இப்பணி, விரைவில் 30 இயந்திரங்களாக அதிகரிக்கப்படும். 130-க்கும் மேற்பட்ட கிளைச் சாலைகளைக் கொண்ட இந்த நெரிசலான பகுதியில், சுமார் 3 ஆண்டுகளில் இப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிக்னல் இல்லாத தடையற்ற பயணம் சாத்தியமாகும். செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளுக்கான போன் சென்னை,ஏப். 1- நம்பகமான செயல்திறன், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் அறிவார்ந்த அம்சங்களை ஒரு ஸ்டைலான தோற்றத்தில் விரும்பும் பயனர்களுக்காக ஒய்51 ப்ரோ என்ற பெயரில் விவோ புதிய செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வரும் அதன் பிரம்மாண்டமான 7200 mAh பேட்டரி ஆகும். மேலும்,6 ஆண்டுகள் வரை பேட்டரி ஆயுள் இருக்கும் என்று விவோ உறுதியளித்துள்ளது. ஏஐ உருவாக்கம், குறிப்புகள் மற்றும் ஏஐ படியெடுத்தல் உதவி போன்ற அம்சங்கள், யோசனைகளை ஒழுங்கமைக்கவும், உள்ளடக்கத்தை உருவாக்கவும், பேச்சை உரையாக எளிதாக மாற்றவும் இந்த போன் உதவும் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஜாக்சன் குழுமத்தின் விளம்பர தூதுவராக கங்குலி நியமனம் சென்னை,ஏப் 1 இந்தியாவின் முன்னணி ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜாக்சன் குழுமம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விளையாட்டுத் துறை நிர்வாகியுமான சௌரவ் கங்குலியுடன் தனது உத்திசார் கூட்டாண்மையை புதனன்று அறிவித்துள்ளது. 80 ஆண்டுகளுக்கும் மேலான வலுவான பாரம்பரியம் கொண்ட ஜாக்சன் குழுமம், நம்பிக்கை, மீள்திறன் மற்றும் முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய புத்தாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறது. இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, தூய்மையான, நிலைப்புத்தன்மையுள்ள ஆற்றல் சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான ஜாக்சன் குழுமத்தின் இலட்சியக் குறிக்கோளை வலுப்படுத்தும் வகையில், இந்த பிராண்டின் விளம்பரங்கள் மற்றும் முக்கியமான முன்முயற்சிகளில் சௌரவ் கங்குலி இடம்பெறுவார் என்று குழுமத்தின் தலைவர் சமீர் குப்தா தெரிவித்துள்ளார்.