தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

11 Dec 2025, 3:52 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.14 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை, டிச. 11 - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறையில், எஸ்ஐஆர் படிவத்தை சமர்ப்பிப்ப தற்கான கால அவகாசம், இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், டிசம்பர் 14 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 19 அன்று வெளியிடப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பர் 14-க்குள் பிஎல்ஓ-க்கள் வசம் அல்லது வாக்காளர்  உதவி மையத்தில் சமர்ப்பிக்கவேண்டும். படிவம் சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் முன்னாள் மேலாளர் திமுகவில் இணைந்தார்

சென்னை, டிச.  11- நடிகரும் தவெக தலைவருமான விஜய்-க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி. செல்வகுமார். விஜய்-யின் இன்றைய சினிமா செல்வாக்கிற்கு முக்கியப் பங்காற்றியவர். புஸ்ஸி ஆனந்த், விஜய்க்கு நெருக்கத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து விலகிய பி.டி. செல்வகுமார், ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்நிலையிலேயே, வியாழக்கிழமை (டிச.11)  அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 100 பேருடன்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திமுக வில் இணைந்துள்ளார். கலப்பை மக்கள் இயக்கத்தை யும் திமுக-வில் இணைப்பதாக அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்:   உண்ணாவிரதத்திற்கு  உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை, டிச. 11 - திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் என்ற பெயரில் இரா. பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  நீதிபதி ஸ்ரீமதி, காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட சன்னதி தெருவில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 50 பேர் உண்ணாவிரதம் இருக்கலாம்; அரசியல் வெளிப்பாடுகள் இருக்கக் கூடாது; மந்திரங்களை மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று கூறி அனுமதி அளித்துள்ளார். இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை  மீதுள்ள சிக்கந்தர் தர்காவிற்கு, வியாழனன்று 2-ஆவது நாளாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கும் இதுபோன்ற மிரட்டல் இ-மெயில் வந்தது.

கூட்டணி குறித்து முடிவெடுக்க  விஜய்க்கு முழு அதிகாரம் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, டிச. 11 - தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், வியாழக்கிழமை (டிச.11) அன்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை நிலையத்தில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் என். ஆனந்த், நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டை யன், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்படும். தேர்தல் அறிக்கை தயாரிக்க தனி சிறப்புக் குழு அமைக்கப்படும். கூட்டணி  குறித்து முடிவெடுக்க கட்சித் தலைவர் விஜய்க்கு  முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியை அகற்றி புதிய தமிழகம் அமைப்போம் என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பருவமழை 6 சதவிகிதம்  கூடுதல்

சென்னை, டிச. 11 - தமிழ்நாட்டில், பருவமழை காலத்தில் இயல்பாக 396.9 மிமீ மழை பொழியும் நிலையில், கடந்த அக்டோபர் 16 அன்று தொடங்கிய வடகிழக்குப் பருவமழை  டிசம்பர் 11 வரை 419.3 மி.மீ. வரை மழையளவைப் பெற்றுள்ளது. இது இயல்பை விட 6 சதவிகிதம் கூடுதல் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இந்த மழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது. இயல்பாக 731.9 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 715.1 மிமீ மழை மட்டுமே பொழிந்துள்ளது.

சதுப்பு நில அளவீட்டு  பணிகள் நிறைவு

சென்னை, டிச. 11 - பள்ளிக்கரணை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அனுமதி வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்ணவ் தொடர்ந்த பொதுநல மனுவில், நீதிமன்றம் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, வியாழக்கிழமை (டிச.11) நடந்த விசாரணையில், தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், அளவீட்டு பணிகள் முடிவடைந்ததாகவும், மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையைப் பெற்ற பின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு ஜனவரி நான்காவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் சிபிஐ தலைவர்கள் சந்திப்பு!

சென்னை, டிச. 11 - திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, சென்னைஅண்ணா அறிவாலயத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா தொடர்பாக முதலமைச்சரிடம் நேரம் கோருவதற்காக வந்திருந்ததாக முத்தரசன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம், டிச. 11 -  காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டிருந்தார். வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.  ஆனால், தனிப்பட்ட விரோதத்தின் அடிப்படையிலேயே நீதிபதி செம்மல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீதிபதிக்கும் அவரது பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் என காவல்துறை சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. முன்னதாக, டிஎஸ்பி-யை சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கைக்குழு நடத்திய விசாரணையின் முடிவில், தலைமைப் பதிவாளர் அல்லி உத்தரவுப்படி, நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.