செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு
23 Nov 2025, 6:20 pm
<p><strong>செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு</strong></p>
<p>கோவை, நவ.23- மதுக்கரை, போடிபாளையம் தடுப்பணை நீரில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், ஈச்சனாரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழைநீர், ஓடையாக மதுக்கரை, போடிபாளையம் வழியாக சென்று மஞ்சப்பள்ளம் ஆற்றில் கலக்கிறது. இதில் போடிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை யில் தேக்கி வைக்கப்படும் நீர் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு முக்கிய பாசன நீராகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பணையில் இருந்த மீன்கள் கடந்த இரண்டு நாட்க ளாக செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவ தோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப் பகுதி விவசாயிகள் கூறுகையில், தடுப்பணை அருகே கட்டப் பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளி யேறும் கழிவுநீர், முழுமையாக இந்த ஓடையில் கலக்கிறது. இதன் காரணமாகவே நீர் மாசடைந்து மீன்களும் இறந்தி ருக்கும். எனவே, குடியிருப்பு கழிவுகளை நீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கக்கூடாது, என்றார்.</p>
