திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி
7 Feb 2026, 5:37 pm
<p>திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி பகுதியில் உள்ள யுனிவர்சல் என்ற தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி நிறுவனர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்கள் உரு வாக்கிய அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பள்ளி தாளாளர் தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
