தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூமியின் மீதான நம் கண்ணோட்டத்தை மாற்றிய குரல் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

6 Jun 2026, 8:38 pm
பூமியின் மீதான நம் கண்ணோட்டத்தை மாற்றிய குரல் -  சிதம்பரம் இரவிச்சந்திரன்

பூமியின் மீதான நம் கண்ணோட்டத்தை மாற்றிய குரல் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும் ஒலிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (David Attenborough) அவர்களின் நூறாவது பிறந்த நாளான மே 8 2026 அன்று புதியதொரு ஒட்டுண்ணி வகை குளவி குடும்பத்திற்கும் புதிய குளவி இனத்திற்கும் (Tiny parasitic wasp) அவரது பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் (Natural History Museum) சேகரிப்பில் இருந்து இந்த உயிரினத்தின் மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது.

பூமியின் மீதான நம் கண்ணோட்டத்தை மாற்றிய குரல்

அட்டன்பரோ இயற்கையின் வரலாற்றில் ஒரு சாம்பியன். சர் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்ட அவர் பல தலைமுறைகளுக்கு இயற்கை உலகின் அற்புதங்களை வீடுகளுக்குள் கொண்டு வந்து காட்டியவர்.

அனைவருக்கும் இயற்கையின் மீது மதிப்பு, மரியாதை, அறியும் ஆர்வம், புவி வாழ்வின் மீது ஆழமான புரிதலை உள்ளுணர்வின் மூலம் ஏற்படுத்தியவர். ஆஸ்திரேலியாவின் காலநிலை செயல்பாடு அறக்கட்டளை (Climate Action Foundation) உள்ளிட்ட பல சர்வதேச சூழல் அமைப்புகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் தங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தனர்.

அறுபதாண்டுகளுக்கும் கூடுதலாக அவர் உலக இயற்கையின் அழகை, சிக்கலான அமைப்பை, பலவீனத்தை காண உதவினார். ஆவணங்கள், கதைகள் மூலம் அவர் புவி வாழ்வின் பன்முகத் தன்மையை எடுத்துக்கூறினார். கடல் ஆழங்கள் முதல் காடுகள் வரை, பாலை வனங்கள், வான் வரை அவரின் பணிகள் நீண்டு பரந்து விரிந்தவை.

காலநிலை மாற்றத்தின் கெடுதிகள், உயிர்ப் பன்முகத் தன்மையின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று வலியுறுத்தும் வலுவான குரல் களில் ஒன்றாக அவரது குரலும் மாறியது. இயற்கையைப் பாதுகாப்பது என்பது வளமான மனித எதிர்காலத்திற்கு முக்கியம் என்பதை தன் செயல்கள் மூலம் அவர் நிரூபித்துக்காட்டினார். “அவருடைய இதிகாச வாழ்வு அவர் காட்டிய காட்சிகளில் மட்டும் இல்லை.

அதற்கும் அப்பால் அது இயற்கையை என்ன விலைகொடுத்தேனும் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தை மக்களி டையில் ஏற்படுத்தியதில்தான் உள்ளது” என்று உலகின் குடிமகன் ((Citizen of the World) என்ற சூழல் அமைப்பின் ஸ்டீவ் எவன்ஸ் (Steve Evans) கூறுகிறார்.

உள்ளுணர்வை ஏற்படுத்திய காணொலித் தொடர்கள்

இயற்கையைப் பாதுகாக்க நூறாவது வயதிலும் தொடர்ந்து தன் வாழ்வை அர்ப் பணித்துவரும் அட்டன்பரோவின் பெயர் ஏற்க னவே பல்லிகள், வௌவால்கள், தவளைகள், அந்துப் பூச்சிகள், தட்டைப் புழுக்கள், நத்தை கள், சிலந்திகளின் புதிய இனங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிரான, புரிந்து கொள்ளக் கடினமான ஊசிவால் குளவி வகை யைச் சேர்ந்த உயிரினத்தின் நீளம் வெறும் 3.5 மில்லிமீட்டர் மட்டுமே. இதன் பெயரில் உள்ள டவ் (tau) என்ற சொல்லின் பொருள் அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அடையாளத் தைக் குறிக்கிறது. இந்த மாதிரி சிலியில் உள்ள வால்டிவியா மாகாணத்தில்(Valdivia province) இருந்து 1983-இல் சேகரிக்கப்பட்டது.

ஆனால் லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் வகைப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த உயிரினங்களின் சேகரிப்பு இருந்த மேசை டிராயரில் ஆகஸ்ட்டிஜென் டெ கெட்டெலேர் (Augustijn De Ketelaere) என்ற தன்னார் வலரால் இதன் வியப்பூட்டும் குணங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. அதுவரை இது பற்றி எவருக்கும் தெரியாமல் இருந்தது. பு

திதாக விவரிக்கப்பட்ட இந்தப் பூச்சி யைப் பற்றிய ஆய்வை இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் பூச்சிகள் பிரிவின் முதன்மை மேற்பார்வையாளர் டாக்டர் கவின் பிரோடு (Dr Gavin Broad) தலைமையேற்று நடத் தினார். இதன் உடலமைப்பு அதன் மிக நெருக் கமான உறவினரான பூச்சி இனத்தில் இருந்து தனித்துவமாக வேறுபட்டு காணப்பட்டது. அதனால் முன்பு வகைப்படுத்தப்பட்ட வேறெந்த குடும்பத்திலும் இதைத் தர்க்கரீதியாக சேர்க்க முடியவில்லை.

“சிறு வயதில் வகைப்பாட்டியல் பற்றி நான் டேவிட் அட்டன்பரோவின் பூமியில் வாழ்க்கை (Life on Earth) என்ற தொடரில் இருந்தே அறிந் தேன். எதிர்காலத்தில் நான்ஒரு வகைப் பாட்டியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற உள் ளுணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. வியக்கத் தக்கவகையில் என் இலட்சியம் வெற்றி கண்டது. நான் ஒரு வகைப்பாட்டியல் ஆய்வாளராக ஆனேன்.

இதற்காக அட்டன்பரோவிற்கு நன்றி சொல்லவேண்டும்” என்று பிரோடு கூறுகிறார். தான் இடும் முட்டைகளை மற்றொரு விலங்கின் உடலில் இடுகின்றன என்பது தவிர இந்த புதிய குளவியின் வாழிடம் அல்லது அதன் வாழ்க்கைச் சுழற்சி பற்றி இன்னும் எதுவும் தெரிய வில்லை.

ஆஸ்திரேலியாவில் வாழும் “இதன் தூரத்து உறவினரான ஒரு உயிரினம் சிலந்தியின் முட்டைகளைத் தாக்குகிறது. இது போன்ற குழுவில் உள்ள இனங்கள் இவ்வாறு செய்வது இயல்பானதே என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவும் தீவிர ஆய்வுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்படமுடியும்” என்று பிரோடு கூறுகி றார்.

இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினம்

“வேறு சில அதிசயிக்கத்தக்க, பிரமிப்பூட்டும் மகத்தான உயிரினங்கள் வாழும் சிலியில் இந்தப் பூச்சியினம் இன்னமும் வாழ்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்த சின்னஞ்சிறிய உயிரி னத்தை அங்கு கண்டுபிடிப்பது வைக்கோல் போரில் ஒளிந்திருக்கும் ஊசியைத் தேடுவது போல.

புதிரான இந்த குளவிகள் பெரும்பாலான வையும் இன்னமும் விவரிக்கப்படாத உயிரி னங்களாகவே உள்ளன. பிரிட்டனில் கூட நாம் புதிய இனங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் விவரிக்கிறோம். அட்டன் பரோ இந்த உயிரினத்திற்கு தன் பெயர் வைக்கப் பட்டது, குறிப்பாக வகைப்பாட்டியல்ரீதியாக ஒரு இனத்தின் துணைக் குடும்பத்திற்கே தன் பெயர் வைக்கப்பட்டது பற்றி மகிழ்வார் என்று நான் நம்புகிறேன்.

என்றாலும் 1961-இல் இந்தோனேஷியா பாப்புவாவில் (Papua) இருந்து சேகரிக்கப்பட்ட எச்சிட்னா (echidna) என்ற பல்லில்லாத, குழி தோண்டி மண்ணிற்கடியில் வாழும் முள் எலி போன்ற ஒரே ஒரு உயிருள்ள விலங்கிற்கு தன் பெயரிடப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இப்போது அவருக்கு தோன்றியிருக்காது என்று கருதுகிறோம். அழியும் ஆபத்தில் இருக்கும் இந்த உயிரினத்திற்கு 1998-இல் சாக்லாஸஸ் அட்டன்பரோகி (Zaglossus attenboroughi) என்று பெயர் வைக்கப்பட்டது.

2023 வரை இந்த நீண்ட அலகுள்ள உயிரினம் புலப்படவில்லை. அப்போது உயிருடன் இருந்த இந்த விலங் கின் காணொலி முதல்முறையாக பதிவு செய்யப் பட்டது. அட்டன்பரோவிற்கு மிகப் பிடித்தமான கட்டிடங்களில் ஒன்றாக லண்டன் இயற்கை வர லாறு அருங்காட்சியகம் விளங்குகிறது.

இந்த புதிய உயிரினக் குடும்பத்தின் கண்டுபிடிப்பு வரலாற்று சேகரிப்புகளில் இது போன்ற தனித்து வமான உயிரினங்கள் இன்னும் கண்டறியப் படாமல் ஒளிந்திருக்கின்றனவா என்று மேலும் ஆராய மற்ற விஞ்ஞானிகள், வகைப்பாட்டியல் ஆய்வாளர்களுக்கு உதவும்.

புதிதாகக் கண்டறியப்படவிருக்கும் உயிரி னங்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கூறவும் புதிய பெயர்களை வைக்கவும் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். “விஞ் ஞானிகளுக்கு சேகரிப்புகளை மறு பார்வையிட இது உலகளவில் உள்ளுணர்வூட்டும்.

திதாகக் கண்டறியப்படும் இத்தகையவை மிகச் சிறிய உயிரினமாக இருந்தாலும் இவற்றின் கண்டு பிடிப்புகள் ஒன்றுபட்ட நம் புரிதலுக்கும் அதன் மூலம் இயற்கை உலகின் எதிர்காலத்திற்கும் பெரும் பங்காற்றும்” என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் அறிவியல் தகவல் தொடர்பு மேலாளர் ஜெனிஃபர் புல்லர் (Jennifer Pullar) கூறுகிறார்.

இது பற்றிய கட்டுரை இயற்கை வரலாறு (Journal of Natural History) என்ற இதழில் வெளிவந்துள்ளது. இயற்கை பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்து வாழும் இந்த மகத்தான மனிதரின் பெயர் இந்தப் புதிய குளவிக்கு வைக்கப்பட்டது மிகப் பொருத்தமான அங்கீகாரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.