தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குவைத் நாட்டில் இறந்த தாயின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மன்றாடிய மகள்கள்

24 Dec 2025, 4:16 pm
குவைத் நாட்டில் இறந்த தாயின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மன்றாடிய மகள்கள்
<p><strong>குவைத் நாட்டில் இறந்த தாயின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மன்றாடிய மகள்கள்</strong></p> <p>திருவண்ணாமலை, டிச.24- திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அடுத்த பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து சித்ரா அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக கத்தார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு தனது மகள்களுடன் சித்ரா தொலைப்பேசியில் பேசியுள்ளார். &nbsp;அதற்கு பின்னர் இரண்டு நாட்கள் தொடர்பு கொள்ளாத நிலையில் குவைத் நாட்டில் இருந்து உங்கள் தாய் இறந்து விட்டார் என தொலைபேசி மூலம் ஆறுமுகத்ததிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து புதன் அன்று (டிச.24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆறுமுகம் தனது குடும்பத்துடன் வந்து குவைத் நாட்டில் இறந்து போன தனது மனைவி சித்ராவின் உடலை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் புகார் மனு அளித்தார். உடன் வந்த அவரது மகள்கள் மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுது தாயின் உடலை மீட்டு தரக்கோரி கேட்டுக்கொண்டனர். தங்களது தாய் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.