டார்வின் டியூசன் மைய மாணவர்களுக்கு பரிசளிப்பு
11 Jun 2026, 11:15 pm
<p><strong>டார்வின் டியூசன் மைய மாணவர்களுக்கு பரிசளிப்பு</strong></p><p>அவிநாசி, ஜூன் 11- அவிநாசியில், மார்க்சிஸ்ட் கட்சியின் நிதியுதவியில் நடை பெற்று வரும் டியூசன் மையத்தில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்த பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி வடக்கு செல்லாண்டி யம்மன் கோவில் வீதியில், மார்க்சிஸ்ட் கட்சியின் நிதியு தவியுடன் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ’சார்லஸ் டார்வின் பள்ளி டியூசன் மையம்’ செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அறிவியல் சிந்தனை மற்றும் சமூக விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் இயங்கும் இம்மையத்தில், தற்போது 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்டணமின்றி பயின்று வருகின்றனர். பள்ளி நேரத்திற்குப் பிறகு மாணவர்களுக்கு இலவச பாடப் பயிற்சிகளும், ஆண்டு தோறும் அறிவியல் கல்விச் சுற்றுலாக்களும் இங்கு நடத்தப் படுகின்றன. இந்நிலையில், கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலா ளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் கௌரிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
