அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் இருளர் இன மக்கள்!
5 Feb 2026, 3:40 pm
<p><strong>அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் இருளர் இன மக்கள்!</strong></p>
<p>- ஜி.லெனின் - தருமபுரி, பிப்.5- பாப்பிரெட்டிப்பட்டி அருகே இரு ளர் இன குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி வட்டம், பூதநத்தம் ஊராட்சி யில் பூதநத்தம், குண்டல்மடுவு ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் குண்டல்மடுவு கிராமத்திலுள்ள இரு ளர் காலனி பகுதியில், 36 குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இம்மக் கள் கல்வி, போக்குவரத்து, சுகாதா ரம் உள்ளிட்ட அடிப்படை வசதிக ளின்றி தவித்து வருகின்றனர். இங் குள்ள 20 குழந்தைகள் 3 கி.மீ., தொலைவிலுள்ள குண்டல்மடுவு அங்கன்வாடி மையத்திற்கு தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல போக்குவரத்து வசதியில்லை. இத னால் குழந்தைகளை பலர் சேர்ப்ப தில்லை. இருளர் காலனியில் அங் கன்வாடி மையம் அமைக்க வேண் டும் என்று பல ஆண்டுகளாக இக் மக்கள் வேண்டுகோள் விடுத்தும், எந்தவொரு அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடியிருக்க வீடுகள் இல்லாமல், குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள சிலருக்கு 50 ஆண்டுகளாக குடியிருந்து இருக்கும் இடத்திற்கு பட்டா, சிட்டா வழங்கப்படவில்லை. சாதி சான்றி தழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை எதுவும் இல்லாததால் அரசு வீடுகள் வழங்குவதில்லை. சான்றிதழ்கள் வழங்கவும் நடவடிக்கை எடுப்ப தில்லை. தார்ச்சாலை வசதி இருந்தும், பேருந்து வசதியில்லாததால், எங்கு செல்லதற்காகவும் நடந்தே பய ணிக்க வேண்டியுள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் குடியிருப்பு களுக்குள் புகுந்து விடுகிறது. அதை தடுக்க வேண்டும். இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். இம்மக்கள் பயன் பெற பகுதி நேர ரேசன் கடை, குழந் தைகள் கல்வி பயில் அங்கன்வாடி மையம் ஏற்படுத்த வேண்டும். அரூர் - பொம்மிடி வரை சென்று வரும் அரசு டவுன் நகரப் பேருந்து, காலை - மாலை நேரங்களில் இருளர் காலனி பகுதிக்கு வந்து செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். வீடு இல் லாமல் குடிசையில் வாழ்பவர்க ளுக்கு வீடுகள் வழங்க வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின் றனர்.</p>
