ஆபத்தானப் பள்ளம்; அதிகாரிகள் அலட்சியம்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>ஆபத்தானப் பள்ளம்; அதிகாரிகள் அலட்சியம்</strong></p>
<p>திருப்பூர், பிப்.10- திருப்பூர், கருப்பகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வெள்ளி யங்காடு கே.எம்.ஜி நகர் செல்லும் சாலை சந்திப்பில் உள்ள சிறு பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்து மிகப்பெரிய வட்ட வடிவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இந்தப் பள்ளம் அடைக்கப்படவில்லை. சிற்றுந்துகள் அதிகம் பயணிக்கும் சாலை யாக இது உள்ளது. பள்ளி மாணவ, மாண விகள், தொழிலாளர்கள், பெண்கள், முதிய வர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயன்ப டுத்தும் இந்த சாலையில் ஆபத்தான நிலை யில் இருக்கும் இந்தப் பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் புகார் கூறுகின்றனர். இப்பிரச்சனை குறித்து மாநகராட்சி இள நிலை பொறியாளர் ஒருவரிடம் தெரிவித்த போது, அவர் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்து அலட்சியப்படுத்தியதாக இப்பகு தியை சேர்ந்த ஒருவர் வேதனையுடன் தெரி வித்தார். இச்சாலை அருகில் தெருவிளக்கு இல் லாத நிலையில், இரவில் இருள் சூழ்ந்தி ருக்கும் பொழுது, வாகனத்தில் வருவோர் இப்பள்ளத்தில் விழுந்து விபரீதம் நிகழும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி இந்த சிறு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று வெள்ளியங்காடு, கருப்பு கவுண்டன் புதூர் பகுதி மக்கள் வலியுறுத்தி னர்.</p>
