ஆபத்தான பரிசல் பயணம்: பாலம் அமைக்க வலியுறுத்தல்
55 minutes before
<p><strong>ஆபத்தான பரிசல் பயணம்: பாலம் அமைக்க வலியுறுத்தல்</strong></p><p>கோபி, ஜூலை 9- அம்மாபாளையம் ஊராட்சி வழியாக பாயும் பவானி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் ப யணம் மேற்கொள்ள உள்ளதால், உயர்மட்ட பாலம் அமைத்துத்தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள், உயர்நிலை மற்றும் கல்லூரி படிப்பை தொடர பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து, அத்தாணி, அந்தியூர் பகுதிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும், வெளியூர் செல்வோ ரும் ஆபத்து காலத்தில் அவசர சிகிச்சைக்கும் பவானி ஆற்றில் பரிசலில் கடந்து தான் சென்று வருகின்றனர். இதற்கிடையே, மழைக்காலங்களில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சுமார் 7 கிமீ தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை யில் மாணவர்கள் உள்ளனர். இதனால் பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்துத் தரவேண்டும் என அம்மாபாளையம் கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில், மாவட்ட நிர்வாகம் அம்மா பாளையம் கிராமம் பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கும் வகையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் மண்பரிசோதனை மேற்கொண்ட னர். இந்த பரிசோதனை முடிவுற்று, கடந்த பல மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லா ததால், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் நாள்தோ றும் பவானி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிச லில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு இப் பகுதியில் விரைந்து உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.</p>
