கார்ப்பரேட் சார்பு கொள்கைகளால் விளையும் ஆபத்து!
21 Jun 2026, 11:26 pm

கார்ப்பரேட் சார்பு கொள்கைகளால் விளையும் ஆபத்து!

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்களும், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கொண்டு வந்துள்ள புதிய போக்குவரத்து விதிமுறைகளும் இந்தியாவின் விவசாயப் பாதுகாப்பு குறித்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளன. போர் நிறுத்த உடன்பாட்டை மீறி இஸ்ரேல் நடத்தியுள்ள அராஜகமான தாக்குதலால் ஏற்பட்டுள்ள லெபனான் நிலவரங்களை ஒட்டி, ஹார்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கான புதிய கட்டுப்பாடு களை ஈரான் விதித்துள்ள சூழலில், இந்தியா வின் யூரியா மற்றும் இதர உர இறக்குமதி பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. இந்தத் தடை யால் நாட்டின் குறுவைப் பருவச் சாகுபடிக்குத் தேவையான உர விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதோடு, விவசாய இடு பொருட்களுக்குப் பிற நாடுகளை மிதமிஞ்சிச் சார்ந்திருக்கும் மோடி அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கைகளும் அம்பலமாகியுள்ளன.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் தற்போதைய உர இருப்பு 196 லட்சம் டன்னாக உள்ளது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் டன் உர இறக்கு மதிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா வின் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திற்கு வர வேண்டிய, ஹாங்காங் பதிவெண் கொண்ட ‘ஜோஸ்கோ ஷுன்சூ’ கப்பல் உள்ளிட்ட 34 கப்பல்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குக் கடற் படைப் பாதுகாப்பை வழங்க வேண்டிய கட்டா யத்திற்கு ஒன்றிய அரசு தள்ளப்பட்டுள்ளது. எட்டிற்கும் மேற்பட்ட உரக் கப்பல்கள் தற்காப்புக்காக ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால், கடல்சார் தொழிலாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. டிஏபி, என்பிகே மற்றும் அம்மோனியா போன்ற உர இறக்குமதிக்காக ரஷ்யா, ஓமன், மலேசியா, மொராக்கோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை இந்தியா தொடர்ந்து நம்பியிருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதைக் காட்டிலும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளிடமிருந்து உரங்களை இறக்குமதி செய்வதிலேயே இந்த அரசு ஆர்வம் காட்டுகிறது.

மறுபுறம், ஈரானின் ‘பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம்’ (PGSA) கப்பல் போக்கு வரத்தை முறைப்படுத்துவதைக் காரணம் காட்டி, சர்வதேச கடல்சார் அமைப்பிடம் புதிய விதி முறைகளைச் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கூடுதல் காப்பீட்டுக் கட்ட ணங்களை விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உர இறக்குமதிச் செலவை யும் பல மடங்கு உயர்த்தும். இந்த கூடுதல் இறக்கு மதிச் சுமையை கார்ப்பரேட் நிறுவனங்கள் சாமா னிய விவசாயிகளின் மீதே உர விலையேற்ற மாகத் திணிக்கும் ஆபத்து உள்ளது. விவ சாயிகளுக்கான மானியங்களை வெட்டிச் சுருக்கி வரும் மோடி அரசு, இந்த இமாலயக் கூடு தல் செலவையும் விவசாயிகளின் தலையி லேயே சுமத்தப் பார்க்கிறது. விவசாய வர்க்கமே, கவனம்!