கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
30 Nov 2025, 4:29 pm

அணைகள் நிலவரம் (ஞாயிற்றுக்கிழமை)

பவானிசாகர் அணை நீர்மட்டம் 102.55அடி நீர்வரத்து 2636கனஅடி நீர்திறப்பு 400கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:137/160அடி நீர்வரத்து:92.47கனஅடி நீர்திறப்பு:963.94கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:70.69/72 அடி நீர்வரத்து:1162கனஅடி நீர்திறப்பு:1110கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:115/120அடி நீர்வரத்து:287கனஅடி நீர்திறப்பு:304கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:54.48/60அடி நீர்வரத்து:913கனஅடி நீர்திறப்பு:995கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:75.96/90அடி. நீர்வரத்து:1440கனஅடி நீர்திறப்பு:350கனஅடி

பேருந்து கவிழ்ந்ததில் 10 ஐயப்ப பக்தர்கள் காயம்

சேலம், நவ.30- மேட்டூர் அணை அருகே சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 10 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்த நிலையில், சாலையை சீர மைக்கக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும் சீரமைக் காததால் தான் இவ்விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், பட்டியந்தல் பகுதி யிலிருந்து சனியன்று 47 ஐயப்ப பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து, ஞாயிறன்று காலை மேட்டூர் அணையின் அடிவா ரம் பகுதிக்கு வந்தது. இப்பேருந்தை தருமபுரியைச் சேர்ந்த ஓட்டுநர் வேலு என்பவர் ஓட்டி வந்தார். காவிரி ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக மட்டம் சாலையில் பேருந்து சென்ற போது, 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவ் விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைப்பார்த்த பொதுமக்கள் காயமடைந்த வர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மாவட்ட மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டூர் காவிரியில் நீராடு வதற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் மட்டம் சாலையை பயன்படுத்தி வரு கின்றனர். நகராட்சிக்கு சொந்தமான இச்சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டு ஆபத்தான நிலை யில் இருந்து வருகிறது. இதனை சீரமைக்கக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், எந்தவொரு நடவ டிக்கையும் எடுக்கவில்லை. சரிந்த சாலையில் பாதுகாப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளாததால், பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் நகராட்சி மற் றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரண மாக விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.

கொடநாடு சம்பவம்: வழக்கிலிருந்து 2 பேர் விடுவிப்பு

உதகை, நவ.30- நீலகிரி மாவட்டம், கோத் தகிரி அருகே உள்ள கொட நாடு பகுதியில் மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலி தாவுக்கு சொந்தமான எஸ் டேட் பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந் தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 11 பேர் சேர்க்கப்பட்டு, உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட அமா்வு நீதிமன்றத் தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக் கில் சம்பந்தப்பட்ட உதகை தனியர் விடுதி உரிமையா ளர் சாந்தா என்ற சாட்சியை கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் மிரட்டியதாகவும், சாட்சி களை கலைக்க முற்பட்ட தாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்.4 ஆம் தேதி உதகை நகர மத்திய காவல் நிலையத்தில் வழக்குப்ப திவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், வெள்ளியன்று நீதிபதி சோழியா இறுதி தீர்ப்பு வழங்கினார். அதில், அரசுத் தரப்பில் எந்தவித சாட்சிக ளும் உறுதி செய்யப்படாத தால், இந்த வழக்கிலிருந்து சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரை விடு தலை செய்து உத்தரவிட் டார்.

கொள்ளையர்களை மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

கோவை, நவ.30- கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்திய கொள்ளையில் மூன்று பேரை போலீசார் சுட்டு பிடித்த நிலையில், அதில் ஒருவர் மருத்துவம னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மாவட்டம், கவுண்டம்பாளை யம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடி யிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து குனியமுத்தூர் அருகே குளத்துப்பாளையத்தில் பதுங்கியி ருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்களை சனியன்று போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், தற் காப்புக்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி னர். இதில் கால்களில் குண்டு பாய்ந்த மூவ ரும் படுகாயமடைந்த நிலையில், மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், ஆசிப் (28) என்பவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று உயி ரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ஆசிப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறை யில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர் பாக போலீசார் மற்றும் நீதிபதி விசாரணை நடத்தவுள்ளனர்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

தருமபுரி, நவ.30- பென்னாகரம் அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்த பாடி ஊராட்சிக்குட்பட்ட கே.குள்ளாத்திரபட்டி காலனி பகுதி யில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய வீடுகள்தோறும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப் பட்டு வந்தது. இருப்பினும் போதுமான குடிநீர் கிடைக்க வில்லை என பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், ஆறு மாதத்துக்கு முன்பு இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் விநியோ கிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், குழாய் செல்லும் வழித்தடம் பட்டா நிலம் என ஊராட்சி நிர்வா கத்திடம் தனிநபர் முறையிட்டார். அதன்பேரில், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று பென்னாகரம் – நாகமரை செல்லும் சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து வந்த பென்னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், ஒகே னக்கல் காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர், உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின்பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.