இறுதி கட்டத்தில் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகள்
2 Jan 2026, 3:33 pm
<p><strong>இறுதி கட்டத்தில் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகள்</strong></p>
<p>திருப்பூர், ஜன. 2 - திருப்பூரின் போக்குவ ரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க் கப்படும் அணைப்பாளை யம் ரயில்வே மேம்பாலத் தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஜனவரியில் இந்த மேம்பா லப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பணியை ஆய்வு செய்தபோது கூறி னார். எனவே அதன்படி விரைவில் இப்ப ணியை முடித்து போக்குவரத்துக்கு அனும திக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்ற னர். திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு பகுதி களை இணைக்கும் ஒரு மேம்பாலம் 2006 ஆம் ஆண்டு அணைப்பாளையம் பகுதியில் மங்க லம் சாலையில் இருந்து நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து ரங்கநாதபுரம் செல்லும் 15 வேலம்பாளை யம் சாலையை அடையும் வகையில் திட்ட மிடப்பட்டது. கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அடிக்கல் நாட்டினார். ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. எனி னும், பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், நிலம் கையகப்படுத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்ற பல தடைகளால் பணிகள் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 2021 ஆம் ஆண்டு மீண்டும் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் னர், இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு, திட்ட மதிப்பீடு ரூ. 42.76 கோடி என திருத்தப்பட்டது. இதைய டுத்து கடந்த ஜூலை மாதம் மேம்பாலப் பணிகள் மீண்டும் வேகமடைந்தது. தற்போது, 17 தூண் கள் அமைக்கப்பட்டு, மங்கலம் சாலைப் பகு தியில் இருந்து கான்கிரீட் பணிகள் முடிக் கப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தின் மேல் உள்ள பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரி சாலைப் பக்கத்தில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முடிவடைந்து போக்குவரத்துக்கு மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. பாலத்தின் அருகிலுள்ள அணைப்பாளை யம், ரங்கநாதபுரம் மற்றும் வள்ளுவர் நகர் பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளும் நிறைவடைந்து வருகின்றன. இம்மேம்பாலம் செயல்பாட்டுக்கு வரும்போது, திருப்பூரின் மேற்குப் பகுதியில் நெரிசல் குறைந்து போக்குவரத்து வசதி மேம்படும்.</p>
