முந்தய பக்கம்

தீக்கதிர் செய்தி எதிரொலி: பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

19 Jun 2026, 11:54 pm
தீக்கதிர் செய்தி எதிரொலி:  பழுதடைந்த மின்கம்பங்கள்  மாற்றம் : பொதுமக்கள் மகிழ்ச்சி
<p><strong>தீக்கதிர் செய்தி எதிரொலி: பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றம் : பொதுமக்கள் மகிழ்ச்சி</strong> </p><p>திருவண்ணாமலை, ஜூன் 19- திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மேல்பாலானந்தல் ஊராட்சி, முகமாரியம்மன் கோயில் மற்றும் பிள்ளையார் கோயில் தெருக்களில், பழுதடைந்த இரண்டு மின்கம்பங்கள் நீண்ட நாட்களாக ஆபத்தான நிலையில் இருந்து வந்தன. இது குறித்து, ஏதேனும் விபரீதம் ஏற்படுவதற்கு முன்னரே மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி, கடந்த ஜூன் 18-ம் தேதியிட்ட ‘தீக்கதிர்’ நாளிதழில் வெளியானது. செய்தியின் எதிரொலியாக, உடனடியாகச் செயல்பட்ட மின்வாரியப் பணியாளர்கள், அன்றைய தினமே அந்த ஆபத்தான மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய கம்பங்களைச் சீரமைத்தனர். துரிதமாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய நிர்வாகத்திற்கும், செய்தியை வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும் அப்பகுதி கிராம மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram