தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலித் இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை கைது செய்ய கோரிக்கை

yesterday
தலித் இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை கைது செய்ய கோரிக்கை
<p><strong>தலித் இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை கைது செய்ய கோரிக்கை</strong></p><p>மயிலாடுதுறை, ஜூன் 20- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரும்பாக்கம் பாலம் அருகில், தலித் இளை ஞரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை கைது செய்யக்கோரியும், நடவடிக்கை எடுக்காத பெரம்பூர் காவல்துறையைக் கண்டித்தும் சிபிஎம், விசிக, சிபிஐ, சிபிஎம்எல் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக பூம்புகார் தொகுதி மாவட்டச் செயலா ளர் பி.ஆர். அன்பரசன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன், ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், மற்றும் சிபிஐ, சிபிஎம்எல் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். இதில் ஜி. வெண்ணிலா, டி. சிம்சன், சி. விஜயகாந்த், கே.பி. மார்க்ஸ், அமுல் காஸ்ட்ரோ, மயிலாடு துறை நகரச் செயலாளர் ஏ.ஆர். விஜய் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி தாலுகா படுகை கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் பாரதிராஜா (43), கடந்த மே 18 அன்று இரவு நல்லாடை கடைவீதியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்தமிழ்வாணன், அய்யப்பன், சரண், ஹரி, விஷ்வா, நந்தகுமார், சரவணக்குமார், சூர்யா உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல், அவரது சாதியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கொடூரமான சாதியத் திட்டுக்களுடன் பாலியல் வன்கொடுமை செய்து, உடைகளைக் கிழித்து, உடல் முழுவதும் கடித்துத் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து, நிர்வாண நிலையில் காட்டுப்பகுதிக்கு ஓடி, தென்னை மரத்தில் ஏறி உயிர் தப்பிய பாரதிராஜா, பலத்த காயங்களுடன் வீடு திரும்பினார். கஞ்சா போதையில் தலித் இளைஞரை பாலியல் துன் புறுத்தல் செய்து கொடூரத் தாக்குதல் நடத்திய இக்கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதியாமலும், குற்றவாளிக ளைக் கைது செய்யாமலும் பெரம்பூர் காவல் துறை அலட்சியம் காட்டி வருவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.