தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்களைப் பாலியல் சீண்டல் செய்ததைத் தட்டி கேட்ட தலித் இளைஞர் படுகொலை

20 Jun 2026, 11:10 pm
பெண்களைப் பாலியல் சீண்டல் செய்ததைத்  தட்டி கேட்ட தலித் இளைஞர் படுகொலை
<p><strong>பெண்களைப் பாலியல் சீண்டல் செய்ததைத் தட்டி கேட்ட தலித் இளைஞர் படுகொலை</strong></p><p>மதுரை, ஜூன் 20- மதுரை அவனியாபுரத்தில் தலித் பெண்க ளைப் பாலியல் சீண்டல் செய்ததைத் தட்டி கேட்ட பாலாஜி என்ற இளைஞர் படுகொலை செய்யப் பட்டதற்குக் கடுமையான கண்டனம் தெரி வித்துள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கடந்த மே 24 அன்று அவனியாபுரம் வீர காளியம்மன் கோவில் திருவிழாவில், தலித் பெண்களிடம் கஞ்சா போதையில் பாலியல் சீண்டல் செய்த கும்பலை பாலாஜி தட்டி கேட்டுள் ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் ராம சாமி, மௌனம் முனீஸ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல், ஜூன் 19 அன்று பிற்பகலில் பாலாஜி மற்றும் ராஜா உசேன் ஆகியோரை அறிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளது. இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜா உசேன் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவத்தை அடுத்து, தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பாலாஜியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இப்படுகொலையைக் கண்டித்து முன்னணி யின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குச் சட்ட ரீதியான நிவாரணமும் பாதுகாப்பும் வழங் கப்பட வேண்டும். மேலும், தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் படு கொலைகளைத் தடுக்க அரசு உடனடி முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.