தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டியலின இளைஞரை சாதிய வன்முறையால் தாக்கி, மது ஊற்றிக் கொடுமை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீஒமு வலியுறுத்தல்

21 Jun 2026, 9:30 pm
பட்டியலின இளைஞரை சாதிய வன்முறையால் தாக்கி, மது ஊற்றிக் கொடுமை  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீஒமு வலியுறுத்தல்

பட்டியலின இளைஞரை சாதிய வன்முறையால் தாக்கி, மது ஊற்றிக் கொடுமை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீஒமு வலியுறுத்தல்

​தஞ்சாவூர், ஜுன் 21 - தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வாசல் பகுதியில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராகவன் என்ற இளைஞர், சாதிய வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்பு டைய குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மா பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவர் தற்போது ஒரத்த நாடு சமத்துவபுரத்தில் வசித்து வரு கிறார். கடந்த ஜுன் 16ஆம் தேதி, நெய்வாசல் கடைத்தெருவில் உள்ள ஒரு கடையில் பொருள் வாங்கச் சென்ற போது, கடைக்காரருக்கும், ராகவனுக்கும் இடையே சிறு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ​அப்போது, கடைக்கு வந்த வடுவூர் தென்பாதி யைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்கு நெருக்கமான நபர்கள் ராகவனிடம் தகராறு செய்ததால், அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்நிலையில், மறுநாள் ஜுன் 17 ஆம் தேதி ராகவன் தனது உற வினர் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த போது திருநாவுக்கரசு உள்ளிட்ட மூன்று பேர், அவரை டூவீலரில் கடத்திச் சென்று, அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். அங்கு ஏற்கெனவே இருந்த ஒருவருடன் சேர்ந்து, மொத்தம் நான்கு பேர் ராகவனை இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

​சாதிய வன்கொடுமை

இந்தத் தாக்குதலின் போது, ராகவனின் சாதிய பின்னணியைச் சொல்லி இழிவாகப் பேசிய திருநாவுக்கரசு, அவரைச் செருப்பால் தாக்கியதோடு, அவரது அந்தரங்க உறுப்பில் செருப்பு காலால் மிதித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், சதீஷ் என்ற இளைஞர் மூலம் ராக வனின் வாயில் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராகவன் தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ​

காவல்துறையின் பாரபட்சமான போக்கு

இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் வழக்கை மடை மாற்றும் நோக்கில், “பாதிக்கப்பட்ட ராகவன் இரும்பு கம்பியை திருடிய தாகவும், அது குறித்து வந்த புகாரின் பேரில் விசாரணை செய்ததாகவும்” கூறி, குற்றவாளிகளுக்கு ஆதர வாக பொய்யான தகவலை பரப்புகின்றனர். உண்மைத்தன்மையை விசாரிக்காமல் பாதிக்கப்பட்டவர் மீதே திருட்டு வழக்கு புனைய முற்படுவதை அமைப்பினர் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ​

ஆறுதல்

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் ராகவனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஆர்.கலைச் செல்வி, நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவருடன் மாவட்ட நிர்வாகிகள் கே. அபிமன்னன், கே. முனியாண்டி, பி. மாணிக்கம், சிறுபான்மை மக்கள் நலக்குழு என்.குருசாமி, வழக்கறிஞர் சங்க செயலாளர் எம்.கே.சேகர், இந்திய மாணவர் சங்க ஹரிஸ், தர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ​

கோரிக்கை

தாக்குதல் நடத்திய நான்கு நபர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, அவர் களைக் கைது செய்ய வேண்டும் என்றும், காவல்துறையின் இத்த கைய பாரபட்சமான செயல்பாட்டை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.