அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் தலித் இளைஞர் மீது தாக்குதல்
10 Apr 2026, 5:30 am

அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் தலித் இளைஞர் மீது தாக்குதல்

மதுராந்தகம், ஏப். 9- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தலித் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு, மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதிமுகவில் உள்ள இருதரப்பினரிடையே முன்னோரம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது. இதில் மோச்சேரி சின்ன காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் விபிஷ் (19) என்ற தலித் இளைஞரை, அதே கட்சியைச் சேர்ந்த ஆதிக்க சமூகத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

மருத்துவமனையில் மிரட்டல் தாக்குதலில் காயமடைந்த விபிஷ், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் அங்கேயே சென்று அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த மோதலில் மதுராந்தகம் வன்னியர் பேட்டையைச் சேர்ந்த கஜம் என்பவருக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜம் அளித்த புகாரின் அடிப்படையில், சின்ன காலனி பகுதியைச் சேர்ந்த 5 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்குள் ஏற்பட்ட இந்த மோதலும், அதைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் மதுராந்தகம் தொகுதி தேர்தல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.