செப்டம்பரில் தலித் பெண்கள் மாநில சிறப்பு மாநாடு
1 hour before
<p><strong>செப்டம்பரில் தலித் பெண்கள் மாநில சிறப்பு மாநாடு</strong></p><p>சென்னை, ஜூன் 8 - தலித் பெண்கள் மாநில சிறப்பு மாநாடு செப்டம்பர் மாதம் சென்னை யில் நடைபெறுகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழ்நாடு முழு வதும் தலித் பெண்கள் குறித்த கள ஆய்வு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக சிறப்பு மாநாடு நடை பெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான வரவேற்புக்குழு கூட்டம் செவ்வா யன்று (ஜூன் 7) கிண்டியில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முன்ன ணியின் பொதுச் செயலாளர் பி. சுகந்தி, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் தலித் பெண்கள் மீதான வன்முறை 159 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உயர்கல்வி நிறு வனங்களில் பயிலும் எஸ்சி, எஸ்டி சமூகத்தை சேர்ந்த 13 ஆயிரம் பேர் கல்வியை முடிக்காமல் வெளியேறி யுள்ளனர் அல்லது வெளியேற்றப்பட் டுள்ளனர். அதிலும் பெண்கள் எண் ணிக்கை அதிகம். தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு குற்ற ஆவண கணக்குப்படி தலித் பெண்களுக்கு எதிராக 11 ஆயி ரத்து 363 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் 419 பாலியல் பலாத் காரம், 421 பாலியல் தொல்லை வழக்குகளாக உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு தலித் பெண் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். மலக்குழிக்குள் தொழிலாளி மர ணமடைந்தால் அந்த குடும்பத்தின் முழுச்சுமையையும் பெண் சுமக்க வேண்டி உள்ளது. சுப நிகழ்வு களுக்கு பிளக்ஸ் பேனர் கூட வைக்க முடியாத நிலை உள்ளது. வன்முறை எப்படி நடந்தாலும் அதில் அதிகம் பெண்கள்தான் பாதிக்கப்படு கின்றனர். இத்தகைய சூழலில் தலித் பெண்கள் மாநில சிறப்பு மாநாட்டை நடைபெற உள்ளது” என்றார். வரவேற்புக்குழுவின் கவுரவத் தலைவராக திரைக்கலைஞர் ரோகிணி, தலைவராக சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ. முருகா னந்தம், செயலாளராக கே. மணி கண்டன், பொருளாளராக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ம. சித்ரகலா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், முன்னணியின் மாவட்டச் செயலாளர் ச.லெனின், மாநிலச் செயலாளர் கா. வேணி, மாநிலக்குழு உறுப்பினர் ப. சுசீந்திரா, மாவட்டப் பொருளாளர் ஆதன் இளங்கீரன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
