தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற பட்டியலினப் பெண் மீது தாக்குதல்

19 Jul 2026, 10:42 pm
பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற பட்டியலினப் பெண் மீது தாக்குதல்
<p><strong>பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற பட்டியலினப் பெண் மீது தாக்குதல்</strong></p><p>கோவை, ஜூலை 19- பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற பட்டியலினப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சாதி ரீதியாக இழிவுபடுத்தி, தாக்கிய நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த பி.நித்யா (27) என்ற பெண், தனது கணவர் பாலமுருகனுடன் கடந்த 8 ஆண்டுகளாக கோவை வடவள்ளி, சுல்தானியாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளியன்று, நித்யா தனது உறவினருடன் அப்பகுதியிலுள்ள நாகம்மாள் கோவிலுக்கு வழிபட சென்றார். அப்போது அங்கு வந்த கோடீஸ்வரன் என்ற நபர், “இது எங்கள் சமூகத்திற்கு சொந்தமான கோவில், உங்களுக்கு உள்ளே வர அனுமதி இல்லை” என்று, சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், பின்தொடர்ந்து வந்த அவர், நித்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட நித்யாவின் கணவர் பாலமுருகன் மற்றும் குடும்பத்தினரை தாக்கியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வடவள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் கோடீஸ்வரன் மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வருவதால், உதவி காவல் ஆணையர் நிலையிலான உயர் அதிகாரியின் புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் த.நாகராஜ், மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளர் மணி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், சம்பந்தப்பட்ட கோடீஸ்வரனை உடனடியாகக் கைது செய்யக் கோரினர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடப் போவதாகவும் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.