குடியிருக்க இடம் இல்லாமல் போராடும் தலித் மக்கள் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறினர்
10 Mar 2026, 3:25 pm
<p><strong>குடியிருக்க இடம் இல்லாமல் போராடும் தலித் மக்கள் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறினர்</strong></p>
<p>மயிலாடுதுறை, மார்ச் 10- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடியை ஒட்டி யுள்ள சாத்தங்குடி வரு வாய் கிராமத்திற்குட்பட்ட கேசவன்பாளையம் என்ற கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுனா மிக்கு பிறகு கட்டித் தரப்பட்ட சின்னஞ்சிறு குடி யிருப்புகளில் இரண்டு, மூன்று குடும்பங்களாக கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இடநெருக்கடி யோடு வாழ்ந்து வருகின்ற னர். குடியிருக்க இடம்கேட்டு கோரிக்கை விடுத்து ஏமாற்ற மடைந்த 95-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர், கடந்த நவம்பர் மாதம், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசைகளை கட்டி குடியேறினர். ஓரிரு நாட்களில் போரா ட்டத்தை திசை திருப்பி தரங்கம்பாடி வட்டாட்சியர் சதீஷ் குமார் பேச்சுவார்த்தை க்கு அழைத்து, காவல் துறை பாதுகாப்புடன் வருவாய் துறையினர் மூலம் ஒட்டுமொத்த குடிசை களையும் பிய்த்தெறிந்து கீற்று, மரங்கள், வீடுகளி லிருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை வாகனங் களில் ஏற்றிச்சென்றார். தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அந்த பகுதி யில் 9 நாட்கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தி குடி மனை பட்டா வழங்க, 60 நாட்களுக்குள் இடத்தை அளவீடு செய்து பிரித்து தருவதாக எழுத்துப் பூர்வ மாக உறுதியளித்தார். இதை யடுத்து போராட்டத்தை தற் காலிகமாக கைவிட்டனர். பேரணி ஆனால் கோட்டாட்சியர்-வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல மாதங் களாகியும் எந்தவித முன் னெடுப்புமின்றி தலித் மக்க ளை ஏமாற்றி வந்தனர். தலித் மக்கள் இடத்தை பிரித்து தரும் வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபடு வோம் எனக்கூறி செவ்வா யன்று நடத்திய போராட்டத் திற்கு, சாத்தங்குடி நிலம் மீட்பு கூட்டமைப்பின் பொறு ப்பாளர்கள் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், ஒன்றி யச் செயலாளர் ஏ. ரவிச்சந்தி ரன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.சிம்சன், அமுல் காஸ்ட்ரோ மற்றும் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், முன்னணி ஊழியர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் நெல்சன், விஷ்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூம்புகார் தொகுதி செயலா ளர் அன்பரசன் தலைமை யில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் நிர் வாகிகள், கேசவன் பாளை யம், வெளிப்பாளையம், புதுப் பாளையம், காரன்தெரு, சம யன் தெரு உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் பொறையார் பழைய பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து கோரிக்கை களை முழங்கியவாறு பேர ணியாக புறப்பட்டு, அஞ்சல கம், மருத்துவமனை வழி யாக வட்டாட்சியர் அலுவல கம் வந்தடைந்தனர். தாக்குதல் அப்போது அங்கு குவிந் திருந்த நூற்றுக்கணக்கான காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரை தடுத்து தாக்கினர். பெண்கள் என் றும் பாராமல் கடுமையாக தாக்கியதில் பலரும் கீழே விழுந்து காயமடைந்தனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறையின் கடுமையான தடுப்புகளையும் மீறி வட்டாட்சியர் அலுவலகம் நுழைந்து குடியேறும் போராட்டத்தை நடத்தினர். வருவாய் துறை அதி காரிகள் எவரும் வந்து போராட் டம் குறித்து கேட்டறியாத நிலையில், வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே உணவு சமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<p> </p>
