முந்தய பக்கம்

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சிபிசிஐ தலைவராக நியமனம்

8 Feb 2026, 3:06 pm
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சிபிசிஐ தலைவராக நியமனம்
<p><strong>தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சிபிசிஐ தலைவராக நியமனம்</strong></p> <p>ஹைதராபாத் இந்திய கத்தோலிக்க ஆயர் &nbsp;பேரவை (சிபிசிஐ - Catholic Bishops&rsquo; Conference &nbsp;of India) என்பது, இந்தியாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க ) கிறிஸ்தவர்களின்) ஆயர்களின் மிக &nbsp;உயரிய கூட்டமைப்பு ஆகும். இது 1944ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தில்லியில் இதன் தலைமையகம் உள்ளது. இந்நிலையில், இந்த கத்தோ லிக்க ஆயர் பேரவையின் தலைவ ராக தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத் கத்தோலிக்கச் சபையின் &nbsp;திருத்தந்தை பூலா அந்தோணி &nbsp;(64 வயது) தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். இந்த அறிவிப்பை சிபிசிஐ பிப்., 7 அன்று அறிவித்தது. 2022ஆம் &nbsp;ஆண்டு முதல் தலைவராகப் பதவி &nbsp;வகித்த திருச்சூர் (கேரளம்) &nbsp;சீரோ-மலபார் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் என்பவருக்குப் பிறகு பூலா &nbsp;அந்தோணி பொறுப்பை ஏற்கிறார். &nbsp;பூலா அந்தோணி தலித் சமூ கத்தைச் சேர்ந்தவர் ஆவர். தலித் &nbsp;சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் &nbsp;சிபிசிஐ தலைவராக பொறுப்பேற் பது இதுவே முதன்முறையாகும். இந்தியாவின் சுமார் 2 கோடி கத்தோலிக்கர் களை (கிஸ்தவ மதத்தின் ஓவர் பிரிவு) வழிநடத் &nbsp;தும் முதல் தலித் பேராயர் என்ற &nbsp;சிறப்பை பூலா அந்தோணி பெற் &nbsp;றுள்ளார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram