முந்தய பக்கம்

டாடி தருவார்... ஆனால் ஓட்டு யார் தருவார்?

31 Mar 2026, 4:50 pm
டாடி தருவார்... ஆனால் ஓட்டு யார் தருவார்?
<p><strong>டாடி தருவார்... ஆனால் ஓட்டு யார் தருவார்?&nbsp;</strong></p> <p>தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டாலே சிவகாசி கே.டி. ராஜேந்திர பாலாஜியின் &lsquo;நாவன்மையும்&rsquo; விஸ்வரூபம் எடுத்துவிடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரனுக்காக வாக்கு சேகரித்த அதே பாலாஜிதான், இன்று &ldquo;அதிமுக இல்லையென்றால் தேமுதிக பூஜ்யம்&rdquo; என சாடியிருக்கிறார். புலி வேட்டையா? மான் குட்டியா? விருதுநகர் அதிமுக வேட்பாளர் வி.ஜி. கணேசனை ஆதரித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, &ldquo;நாங்கள் புலி வேட்டைக்குச் சென்றோம், ஆனால் ஒரு மான்குட்டிதான் சிக்கியிருக்கிறது&rdquo; எனத் தேமுதிகவைச் சாதாரணமாக எடைபோட்டுப் பேசியுள்ளார். தேமுதிக, திமுக கூட்டணி யில் இணைந்ததால், தங்களது தோல்வி பயத்தை மறைக்க அவர் இப்படிப் பேசுகிறாரோ என விருதுநகர் முதல் சிவகாசி வரை முணுமுணுப்பு கேட்கிறது. &lsquo;டாடி&rsquo; பாசம் இன்னும் குறையவில்லை! அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, &ldquo;மத்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கேட்டால், ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நிதி தருவார்&rdquo; என நம்பிக்கையோடு குறிப்பிட்டுள்ளார். முன்பு ஒருமுறை மோடியை &ldquo;டாடி&rdquo; என்று விளித்துப் பரபரப்பை &nbsp;ஏற்படுத்திய பாலாஜி, இப்போதும் அதே பாசப் பிணைப்பு டன் &lsquo;டாடி தருவார்&rsquo; என நம்பிக் கொண்டிருக்கிறார். தேமுதிகவின் பலமும் &nbsp;பாலாஜியின் பலவீனமும்! தேமுதிக தங்களுக்கு நிகரான போட்டியே இல்லை என்று பாலாஜி கூறினாலும், அந்தப் பகுதியில் அக்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை அவர் அறிவார். அதனால்தான், அவர்கள் திமுக பக்கம் போனால் ஏற்படப்போகும் சரிவை இப்போதே &lsquo;புலம்பலாக&rsquo; வெளிப்படுத்தி வருகிறார். டாடி தரும் நிதியை வைத்துத் தேர்தலைச் சந்திக்கலாம், ஆனால் மக்களின் மனதை வெல்லப் பாலாஜி என்ன செய்யப்போகிறார்?</p>
Share
FacebookXWhatsAppTelegram