தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கன்டோன்மெண்ட் வாரச்சந்தையை பாதுகாக்கப்படும் டி.ஆர்.பாலு எம்.பி., உறுதி

7 Feb 2026, 5:37 pm
கன்டோன்மெண்ட் வாரச்சந்தையை பாதுகாக்கப்படும் டி.ஆர்.பாலு எம்.பி., உறுதி
<p><strong>கன்டோன்மெண்ட் வாரச்சந்தையை பாதுகாக்கப்படும் டி.ஆர்.பாலு எம்.பி., உறுதி</strong></p> <p>சென்னை, பிப். 7 &ndash; கன்டோன்மெண்ட் வார சந்தையை பாதுகாக்கப் படும் என்று டி.ஆர்.பாலு எம்.பி., உறுதியளித்தார். பல்லாவரம் கன்டோன் மெண்ட் வாரச்சந்தை 150 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தச் சந்தையை 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓல்ட் டிரங்கு ரோடுக்கு கன்டோன்மெண்ட் நிர்வா கம் இடமாற்றம் செய்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்த சந்தை இயங்கும். இந்தச் சந்தையில் சுமார் 1200 பேர் வியாபாரம் செய்து வருகின்றனர். கடை அமைக்க கன்டோன் மெண்ட் நிர்வாகம் நிர்ண யித்த கட்டணத்தை வியா பாரிகள் செலுத்தி வரு கின்றனர். இந்நிலையில், ஓல்ட் டிரங்கு ரோட்டையும் திரிசூலத்தையும் இணைக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து வாகன மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ள மேம்பால திட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்லாவரம் கன்டோன்மெண்ட் வார சந்தை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதனையடுத்து இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கன்டோன்மெண்ட் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் திரு பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு விடம் சனிக்கிழமையன்று (பிப்.7) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன், வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் ஒய்.இஸ்மாயில் ஆகியோர் மனு அளித்து பேசினர். அப்போது, மேம்பாலத் திட்டம் கொண்டு வந்தால் 1200 வியாபாரிகளின் குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கன்டோன் மெண்ட் நிர்வாகம் மேம்பால திட்டத்திற்கு அனுமதிதான் மறுத்துள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யப்பட வில்லை. சந்தையை பாதிக்கும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தினர். மேம்பாலம் வராது இதனையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, கன்டோன்மெண்ட் அதிகாரிகளை தொடர்பு கொண்டு டி.ஆர்.பாலு பேசினார். வாரச்சந்தை வியாபாரிகளை பாதிக்கும் வகையில் மேம்பாலத் திட்டம் வராது என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமு, சங்க ஆலோசகர் எம்.சி.பிர பாகரன், பொருளாளர் பி.அஸ்ரப் அலி, நிர்வாகி கள் பி.முருகன், உதுமான் அலி, மைதீன், சையது அலி, பாபு ஆகியோர் உடனி ருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.