சமூகநீதி, மதச்சார்பின்மையில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும்! சிபிஐ பொதுச்செயலாளர் து. ராஜா பேட்டி
30 Oct 2026, 10:27 pm

சமூகநீதி, மதச்சார்பின்மையில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும்! சிபிஐ பொதுச்செயலாளர் து. ராஜா பேட்டி

சென்னை, அக். 30 -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தையொட்டி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜா, சென்னையில் வெள்ளியன்று (அக்.30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறிய

தாவது:பாஜக ஆட்சிக்குவந்த பிறகு, இந்தியா தனது நடுநிலை, சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை கைவிட்டு வருகிறது. உலகத்தில் அமைதி நிலவவும், வளர்ச்சி ஏற்படவும் வேண்டுமெனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய போர்க் கொள்கையை கைவிடவேண்டும்.

இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து வருகிறது. விலைவாசி பன்மடங்கு உயர்ந்துஉள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ந்து வருகிறது. வேலையின்மை அதிகரித்துள்ளதால் இந்திய இளைஞர்களிடையே அமைதியின்மை அதிகரித்துள்ளது. நம்பிக்கையற்ற எதிர்காலத்தால் இளைஞர்கள் போராடுகின்றனர்.

பொதுத்துறை தனியார்மயமாக்கப்படுகிறது. இடஒதுக்கீடு வாய்ப்பு குறைந்து வருகிறது. தனியார்மயமாக்கலால் இடஒதுக்கீடு இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சமூகநீதி, மதச்சார்பின்மையில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நவ.3 ஆர்ப்பாட்டம்

மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் குறிப்பிடுகையில், “விலைவாசி உயர்வை கண்டித்து நவ.3 அன்று மாவட்டத் தலை

நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழக அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்கிறோம். அதேநேரம் இந்த அரசுகருத்து சுதந்திரத்தை அச்சுறுத்துவதை ஏற்க முடியாது” என்றார். “நவ. 10 அன்று சென்னையிலும், அதனை தொடர்ந்து 7 நகரங்களிலும் இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கை வெளியிடப்படும். மார்ச் 23 அன்று திருச்சியில் இடதுசாரி கட்சிகளின் பேரணி நடைபெறும்” என்றார்.