தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூவத்தி கிராமக் கோவில் விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ.ஒ.மு பெருந்திரள் முறையீடு

12 Jan 2026, 6:29 pm
பூவத்தி கிராமக் கோவில் விவகாரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ.ஒ.மு பெருந்திரள் முறையீடு

பூவத்தி கிராமக் கோவில் விவகாரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ.ஒ.மு பெருந்திரள் முறையீடு

கிருஷ்ணகிரி, ஜன.12-  கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தி கிராமத்தில் பல தலைமுறைகளாக நிலவி வரும் சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சாதிய அமைப்புகளைக் கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதைக் கண்டித்தும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. சமூக ஒற்றுமைக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் பூவத்தி கிராமத்தில் தலித், பழங்குடியினர், இருளர், குரும்பர் மற்றும் நாயுடு உள்ளிட்ட அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள 343 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் நிலம் மற்றும் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிறு தெய்வக் கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் பூசாரி களாக இருந்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஒற்று மையைச் சகித்துக் கொள்ள முடியாத சில ஆதிக்க சாதி அமைப்புகள், கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பதற்றத்தை உருவாக்கி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உண்மை நிலையை ஆராயாமல், சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் அந்த அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டினர். நிர்வாகத்தின் உறுதிமொழி: தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டத் தலைவர் ஏ.ஆனந்த்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் ஆகி யோர் தலைமையில் திரண்ட பொது மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்பட்ட தீர்வுகள்

கோவில் வழிபாடு: கோவில்களில் வழிபாடு மற்றும் நிலம் சார்ந்த விவகாரங்கள் ஏற்கனவே இருந்த நடைமுறைப்படியே தொடரும். இதில் சம்பந்தமில்லாத வெளிநபர்கள் தலையிட அனுமதிக்கப்பட மாட்டாது.  சமரசப் பேச்சுவார்த்தை  இந்தப் பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக முத்தரப்பு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். காவல்துறை நடவடிக்கை  பாதிக்கப்பட்ட மக்கள் மீது பதியப்பட்ட ஒருதலைப்பட்சமான வழக்குகள் குறித்து உரிய ஆய்வு செய்யப்படும். அமைதியை நிலைநாட்டவும், அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தனர். இந்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து, பூவத்தி கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் வழிபாட்டு உரிமையையும் காக்கத் தொடர்ந்து போராடுவோம் எனத் தலைவர்கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.