டி. அரசன் தாயார் காலமானார்
28 Dec 2025, 5:05 pm
<p><strong>டி. அரசன் தாயார் காலமானார்</strong></p>
<p>கடலூர், டிச. 28- இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் கடலூர் மாவட்டச் செயலாளரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் கடலூர் ஒன்றியச் செயலாளருமான டி. அரசன் தாயார் த. குப்பு (வயது 85) சனிக்கிழமை இரவு 12 மணி அளவில் காலமானார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், காந்தளவாடி கிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செய லாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.</p>
