தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல் பங்க் அருகே சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு

30 Nov 2025, 4:29 pm
பெட்ரோல் பங்க் அருகே சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு
<p><strong>பெட்ரோல் பங்க் அருகே சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு</strong></p> <p>கோவை, நவ.30- சங்கனூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள &nbsp;பாத்திரக்கடையில் இரவு நேரத்தில் தீ விபத்து &nbsp;ஏற்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண் டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், கணபதி - சங்க னூர் சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் &nbsp;அருகே சிவக்குமார் என்பவர் தக்ஷா மெட்டல் &nbsp;மார்ட் என்ற பெயரில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சனியன்று இரவு அவரது மனைவி கீர்த்தனா, பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது, கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அவர் கடையிலிருந்து வெளியே றிய நிலையில், அக்கடையில் வைக்கப்பட்டி ருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. நள்ளிரவு நேரத்தில் அடுத்தடுத்து 5க்கும் அதிகமான சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகு றித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் &nbsp;சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக் கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி &nbsp;நேர போராட்டத்திற்கு பின்பு தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. பெட்ரோல் பங்க் அரு கில் இருக்கும் பாத்திரக்கடையில் தீ விபத்து &nbsp;ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த தீய ணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கபட்டது. இவ்விபத்து &nbsp;குறித்து தீயணைப்பு துறையினரும், சரவ ணம்பட்டி போலீசாரும் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கடையில் எதற்காக சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது? என்பது &nbsp;குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித் தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ் விபத்தில் நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.