தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளச் சந்தையில் சிலிண்டர்கள் தாராளம்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

11 Apr 2026, 5:30 am
கள்ளச் சந்தையில் சிலிண்டர்கள் தாராளம்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளச் சந்தையில் சிலிண்டர்கள் தாராளம்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப்.10- கோவை மாவட்டத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபகாலமாக உணவகங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வணிக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, சிலிண்டர்களை கள்ளச் சந்தையில் புகுத்தி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை நிலவுகிறது. இதனால் சிறு வணிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த முறைகேடுகளை உடனடியாக கண்காணித்து, தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிபிஎம் வடக்கு கிளை தலைவர் என். ஜாகீர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் கே.மனோராஜ் துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேணுகோபால், கே.எஸ்.கனகராஜ், என்.ஆர். முருகேசன், என்.ஆறுச்சாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.