தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிலிண்டர் தட்டுப்பாடு மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் போராட்டம்

20 Mar 2026, 2:55 pm
சிலிண்டர் தட்டுப்பாடு  மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் போராட்டம்
<p><strong>சிலிண்டர் தட்டுப்பாடு &nbsp;மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் போராட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 20 - &nbsp;திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர், பெரியார் தெருவில் லூப்ரா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல மையத்திற்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை &nbsp;நிறுத்தப்பட்டதாகக் கூறி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. &nbsp;இந்த இல்லத்தில் பார்வையற்ற வர்கள், முதியவர்கள், பார்வையற்ற வர்களின் குழந்தைகள், ஏழை குழந் தைகள் என மொத்தம் 200 பேர் &nbsp;வசித்து வருகின்றனர். இந்த இல்லத் துக்கு, கடந்த சில நாட்களாக சமை யல் எரிவாயு சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. &nbsp;அதைத் தொடர்ந்து லூப்ரா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல மைய நிர்வாக இயக்குநர் தாமஸ் மற்றும் அந்த இல்லத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள் என திருச்சி &nbsp;ஆட்சியர் அலுவலகத்தை காலி சிலிண்டர்களுடன் முற்றுகையிட்டு மனு அளித்தனர். &nbsp;அந்த மனுவில், &ldquo;கடந்த 9 நாட் களாக சிலிண்டர் மற்றும் மண்ணெண் ணெய் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறோம். இது தொடர் பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒரு தொலைபேசி எண்ணை &nbsp;கொடுத்து பேசுமாறு கூறினர். அந்த &nbsp;எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்கள் குறைகளை தெரிவித்தோம். ஆனால் இதுவரை சமையல் எரி வாயு மற்றும் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. ஆகவே தயவு கூர்ந்து எங்களுக்கு சமையல் எரி வாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண் ணெய் வழங்கிட கேட்டுக் கொள் கிறோம். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் வராவிட்டால் நாளைக்கு &nbsp;எங்களால் உணவு சமைக்க முடி யாது என்பதை தெரிவித்துக் கொள் கிறோம்&rdquo; &nbsp;எனக் கூறியுள்ளனர். பின்னர் மனுவை அங்குள்ள பெட்டி யில் போட்டனர். &nbsp;இந்த போராட்டம் பற்றி அறிந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர். அதன் பேரில் &nbsp;போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.