முந்தய பக்கம்

சிலிண்டர் தட்டுப்பாடு நெல்லையில் அல்வா தயாரிப்பு நிறுத்தம்

24 Mar 2026, 3:23 pm
சிலிண்டர் தட்டுப்பாடு நெல்லையில் அல்வா தயாரிப்பு நிறுத்தம்
<p><strong>சிலிண்டர் தட்டுப்பாடு நெல்லையில் அல்வா தயாரிப்பு நிறுத்தம்</strong></p> <p>திருநெல்வேலி, மார்ச் 24- வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலியில் உள்ள பிரபல &lsquo;சாந்தி ஸ்வீட்ஸ்&rsquo; நிறுவனத்தில் அல்வா தயாரிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா &ndash; ஈரான் போரின் தாக்கம் காரணமாக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நெல்லை மாவட்டத்திலும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இயங்கும் &lsquo;சாந்தி ஸ்வீட்ஸ்&rsquo; நிறுவனம் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படும் பிரபலமான இனிப்பு நிலையமாகும். ஆனால் கடந்த சில நாட்களாக வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கையிருப்பில் உள்ள சிலிண்டர்கள் முழுவதும் காலியாகி விடும் நிலை இருப்பதால், அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனையை தற்காலிகமாக நிறுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுவரை இப்படியான தட்டுப்பாட்டை சந்தித்ததில்லை என்றும், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகளாக பழங்கால முறையில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி அல்வா தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram