சிலிண்டர் தட்டுப்பாடு திருவண்ணாமலையில் இலவச லட்டு-பிரசாதம் நிறுத்தம்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>சிலிண்டர் தட்டுப்பாடு திருவண்ணாமலையில் இலவச லட்டு-பிரசாதம் நிறுத்தம்</strong></p>
<p>திருவண்ணாமலை, மார்ச் 21 - திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் வணிக கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதே இதற்கு காரணம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முறுக்கு, அதிரசம், எள்ளடை ஆகிய விற்பனை பிரசா தங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரிக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் தயாரிப்பு பணி மீண்டும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
