ஆந்திரா, ஒடிசாவிற்கு ரெட் அலர்ட்; விமானங்கள் ரத்து; பள்ளிகளுக்கு விடுமுறை - மிரட்டிய முரசு புயல் விஜயவாடா
2 Nov 2026, 9:45 pm

ஆந்திரா, ஒடிசாவிற்கு ரெட் அலர்ட்; விமானங்கள் ரத்து; பள்ளிகளுக்கு விடுமுறை - மிரட்டிய முரசு புயல்

விஜயவாடா

வங்கக்கடலில் உருவான குறைந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரப் புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘முரசு’ (இந்தியா வைத்த பெயர்) என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில், முரசு புயல் தெற்கு ஆந்திராகடலோரப் பகுதியான நெல்லூர் - நரசாப்பூர்இடையே (ஓங்கோல் அருகே) கரையை கடக்கும். திங்களன்று நள்ளிரவு 11:30 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:00 மணி வரைபுயல் கரை கடக்கும் செயல்முறை நீடிக்கும் என்றும், மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. திங்களன்று இரவு 8 மணியளவில் முரசு புயல் நெல்லூரை நெருங்கியது. ஆனால் திங்களன்று மாலை முதலே ஆந்திரா மற்றும் அண்டைமாநிலங்களான ஒடிசா, தெலுங்கானாவின் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

கனமழையால் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திரா-வட தமிழகக்கடலோரப் பகுதிகளுக்கு நவம்பர் 4ஆம் தேதிவரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களில் உள்ளபள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, அம்மாநில அரசுகள் உத்தரவிட்டன.