தீக்கதிர் விரைவு செய்திகள்
1 Nov 2026, 9:44 pm

வடக்குப் பகுதியை நோக்கி நகரும் ‘முரசு’ புயல் ஒடிசாவில் முன்னேற்பாடு தீவிரம்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘முரசு’ புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக் கையில்,”‘முரசு’ புயல் நவ. 3ஆம் தேதி காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் நர்சாபூருக்கு இடைப்பட்ட கரையைக் கடக்கும்” என தெரிவித்துள்ளது.ஆந்திராவில் கரையைக் கடக்கும் ‘முரசு’ புயல் தெற்கு ஒடிசாவை தாக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி,“புயல் காரணமாக ஒடிசாவின் தெற்குப்பகுதிகளுக்கு ஏற்கெனவே தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளிலும் மலைப்பாங்கான பகுதிகளிலும் வசிக்கும் மக்களை வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது” எனதெரிவித்தார். அதே போல ஒடிசா வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறுகையில்,“முரசுபுயலின் தாக்கத்தால் ஒடிசாவில் நவ. 2ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். நவ. 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது

ராம் லீலா மைதானம் நோக்கி பேரணியாக சென்ற ‘திஷா’ (DISHA) என்ற மாணவர் அமைப்பின் கீழ் சென்ற மாணவர்கள், தில்லி மிண்டோ சாலையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை செய்து, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. ‘திஷா’ என்பது தில்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்கலைக் கழகங்களில் (தில்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில்) இயங்கி வரும் இடதுசாரிமுற்போக்கு மாணவர்கள் அமைப்பாகும்.

கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி தேவாஸ் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கா ஹோட்டல். இந்த ஹோட்டல் வளாகத்தில் உணவுக் கழிவுகள் சேகரிக்கப்படும் நிலத்தடித் தொட்டியைச் சுத் தம் செய்வதற்காக இரு தொழிலாளர்கள் முதலில் உள்ளே இறங்கினர். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் அவர் களை மீட்க முயன்ற மேலும் இருவர் தொட்டிக்குள் இறங்கினர். 4 பேரும் வெளியே வராததால், மாதவ் நகர் காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் 90 நிமிடப் போராட்டத்திற்குப் பின் தொட்டிக்குள் இறங்கி நால்வரையும் வெளியே மீட்டனர். 4 பேரும் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. முதலுதவியாக செயற்கை சுவாசப் பயிற்சி அளிக்கப்பட்ட போதிலும், நால்வரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.