தீக்கதிர் உலக செய்திகள்
18 Nov 2025, 2:35 pm

மெலிசா புயலால் 4.77 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிப்பு

மெலிசா புயலின் காரணமாக கரீபியன் தீவுப் பகுதிகளில் கியூபா, ஹைதி மற்றும் ஜமைக்காவில் சுமார் 4,77,000 குழந்தைகளின் பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளரான ஸ்டீஃபன் டுஜாரிக் பேசிய போது புயலின் காரணமாக பல பள்ளிக்கூட கட்டடங்கள் சேதமடைந்து மூடப் பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளன. எனினும் தற்காலிக இடங்களில் அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியும் நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தால் உலகம் கதறுகிறது : போப் லியோ

வெள்ளம், வறட்சி, புயல், வெப்ப நிலை அதிகரிப்பது ஆகியவற்றால் உலகம் கதறுகிறது என காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் போப் லியோ கூறியுள்ளார். மேலும் காலநிலை மாற்றங்களால் ஒவ்வொரு மூன்று நபர்களில் ஒருவர் அதிக பாதிப்பை சந்திக்கிறார். இம்மக்களைப் புறக்கணிப்பது மனிதநேயத்தைப் புறக்கணிப்ப தற்கு இணையானது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்ப தற்கு சில தலைவர்களிடம் விருப்பம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்வா மாகா ணத்தின் இரு மாவட்டங்களில் பாக் ராணு வம் நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தா னில் இருந்து செயல்படும் தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்களும் பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பும் திட்டமிட்டு இந்த தாக்குதல்களை அரங்கேற்றுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தோனேசிய நிலச்சரிவு 18 பேர் பலி; 34 பேர் மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் சுமார் 10 முதல் 25 அடி ஆழத்தில் மக்கள் புதைந்து போயுள்ளனர். இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டு பேரிடர் மீட்பு படை வெளியிட்ட அறிக்கையில் இது வரை 30 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்ணுக் கடியில் சிக்கியுள்ள மக்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கனமழை காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 34 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் 500 சதவிகிதம் வரி

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது கூடுதலாக 500 சதவிகிதம் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவின் பொரு ளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை டிரம்ப் முன்னெடுத்து வருகிறார். அதே வேளையில் போர் தொடரும் வகையில் ஐரோப்பிய நாடுகளின் மூலமாக உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஈக்வடார் : வலதுசாரி சக்திகளுக்குத் தோல்வி

குயிட்டோ, நவ.18- தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அமெ ரிக்க ராணுவத் தளங்களை அமைப்பதற்கு எதி ராக அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் கொண்ட படைத்தளங்களை அமெரிக்கா அமைத்திருக்கிறது. இவற்றை வைத்துதான் பல நாடுகளில் போர்களை தூண்டி விடுகிறார்கள். இரு தரப்புக்கும் ஆயுதங்களை வழங்குகிறார்கள்.இதன் மூலமாக ஆயுதங்களைத் தயாரிக்கும் பன் னாட்டுப் பெரு நிறுவனங்கள் லாபத்தை குவிக் கின்றன. ஈக்வடாரில் ஏழு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க ஆதரவு வலதுசாரித் தலைவர் டேனியல் நோபோ வெற்றி பெற்றார். இந்த வெற்றியால், மீண்டும் அதி தீவிர வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைகளை அவர் தொடங்கி னார். அமெரிக்கப் படைத்தளங்களை ஈக்வடார் மண்ணில் அமைப்பதும் அதில் ஒன்றாகும். அந்நிய படைத்தளங்களை அமைப்பதற்கு சட்டப்படி அனுமதியில்லை. எனவே அதற்கான வாய்ப்பை உருவாக்கித்தர பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார்கள். அத்தோடு நிற்காமல், ஒரு அம்சத்தை மட்டும் மக்கள் முன்பு நிறுத்தினால் சிக்கல் ஏற்படும் என்று உணர்ந்தனர். எனவே நான்கு அம்சங்களை பொது வாக்கெடுப்புக்கு விட்டனர். நாட்டில் அந்நிய ராணுவத் தளங்களை அமைப்பது, நாடா ளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை யைக் குறைப்பது, அரசியல் கட்சிகளுக்கு அரசு நிதி தருவதை நிறுத்துவது, அரசியல் அமைப்பு சட்ட அவையை அமைப்பது ஆகிய அம்சங்களை மக்கள் முன் வைத்தனர். அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய சக்திகளின் படைத்தளங்களை ஈக்வடார் மண்ணில் அனு மதிக்கக்கூடாது என்பதற்கு ஆதரவாக 61 விழுக் காடு வாக்குகள் கிடைத்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்ப தற்கு எதிராக 58.04 சதவிகித வாக்குகளும், அர சியல் கட்சிகளுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டாம் என்பதற்கு ஆதரவாக 53.45 சதவிகித வாக்கு களும், புதிதாக அரசியல் அமைப்பு சட்ட அவை யை உருவாக்க வேண்டாம் என்று 61.58 சத விகித வாக்குகளும் விழுந்தன. படைத்தளங்களை அமைப்பதற்கு ஆதரவு கோரி பொது வாக்கெடுப்பு நடத்தும் முன்பே, படைத் தளங்களை அமைப்பதற்கான பணியை அமெ ரிக்கா தொடங்கிவிட்டது. இடங்களைப் பார்வை யிட்டு இரண்டு தளங்களைத் தேர்வு செய்து விட்டார் கள். ஏழு மாதங்களுக்கு முன்பாக, தங்களுக்குத் தலையாட்டும் நோபோ ஜனாதிபதியாகிவிட்ட மகி ழ்ச்சியில் வேலைகளைத் தொடங்கினர். ஆனால், அதற்கு ஈக்வடார் மக்கள் தடை போட்டுவிட்டார்கள். 2007 ஆம் ஆண்டில் இடதுசாரி அலையால் ரபேல் கோரியா ஜனாதிபதியாகத் தேர்வானார். அவரது தலைமையிலான அரசு அந்நிய சக்திகளின் படைத்தளங்கள் அமைப்பதற்கு எதிராக சட்டத்தை உருவாக்கியது. 2008 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. வலதுசாரி சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் அமெரிக்காவின் முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளன.