ஆந்திராவில் கரையைக் கடக்கும் அர்னாப் புயல்! தமிழகத்தில் பலத்த காற்று, மழைக்கு வாய்ப்பு
27 Oct 2026, 9:28 pm
<p><strong>ஆந்திராவில் கரையைக் கடக்கும் அர்னாப் புயல்! தமிழகத்தில் பலத்த காற்று, மழைக்கு வாய்ப்பு</strong></p><p>சென்னை, அக். 27 -வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, புதன்கிழமை (அக்.28) அன்று காலை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p><p>இந்தப் புயலின் நேரடித் தாக்கம் ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கே இருந்தாலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p>
