அர்னாப் புயல் - 3 பேர் பலி
28 Oct 2026, 8:55 pm

அர்னாப் புயல் - 3 பேர் பலி

‘அர்னாப்’ புயல் ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் மற்றும் புதுச்சேரியின் ஏனம்இடையே உள்ள கடற்கரைப் பகுதியில் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் பாதிப்பில் 3 பேர்பலியாகியுள்ளனர். 1,97,684 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் கரையை கடக்க துவங்கியதும்ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்கம் ஆகியமாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,‘அர்னாப்’ புயல் மிக தீவிர புயல் என்ற நிலையில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்து புதன்கிழமை அதிகாலை

2 மணி முதல் காலை 8 மணிக்குள் நர்சாபூருக்கு கிழக்கு - வடகிழக்கேசுமார் 20 கி.மீ. தொலைவிலும், ஏனத்துக்கு தென்மேற்கே 40 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவுக்கு தென்மேற்கே 60 கி.மீ.தொலைவிலும் கடற்கரையைக் கடந்தது.புயல் கரையைக் கடந்தபோது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வரை இருந்தது. சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ.வரை அதிகரித்தது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 1351 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.ஏனம் வருவாய்த் துறை சார்பில்19 தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டன. வேகமாக வீசிய காற்றின் காரணமாக கிராமப்புறங்களில் 700 க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்துள்ளன. தேசியபேரிடர் மீட்புப் படை மற்றும் புதுச்சேரிமாநில பேரிடர் மீட்புப் படை உதவியுடன் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பல சாலைகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. புயல்கரையை கடந்திருந்தாலும் அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.