கரையைக் கடந்தது ‘அர்னாப்’ ஏனாமில் கனமழை; எண்ணூரில் கடல் சீற்றம்!
28 Oct 2026, 9:07 pm

கரையைக் கடந்தது ‘அர்னாப்’ ஏனாமில் கனமழை; எண்ணூரில் கடல் சீற்றம்!

சென்னை, அக். 28 -மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா – புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் இடையே புதன்கிழமை (அக். 28) அதிகாலை முழுமையாகக் கரையைக் கடந்தது.

முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தின் ஏனாமில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே தொடர்ந்து கனமழை கொட்டியது. இந்நிலையில், புயல் கரையை கடக்கும் போது வீசிய பலத்த காற்றின் காரணமாக, ஏனாம் அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகள் மழைநீரில் மூழ்கின.

சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, அலைகள் பாறைகளைத் தாண்டிச் சாலையில் புகுந்தன. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சாலையில் தேங்கிய நீரை மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர்க் கால்வாய் வழியாக வெளியேற்றினர்.

தமிழகத்தின் வடக்குக் கடலோரப் பகுதிகளில் அக். 28 நண்பகல் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும்

என்றும், அதன்பிறகு படிப்படியாகச் சீரடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.