தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னையை நெருங்கும் ‘டிட்வா’ புயல்!

28 Nov 2025, 2:28 pm
சென்னையை நெருங்கும் ‘டிட்வா’ புயல்!

சென்னையை நெருங்கும் ‘டிட்வா’ புயல்!

சென்னை, நவ. 28 - வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது இலங்கையின் மேல் நிலை கொண்டு வடக்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இந்த புயல் இலங்கையின் திரு கோணமலைக்கு தென்மேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச் சேரிக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 540 கிலோமீட்டர் தொலை விலும் நிலை கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, டிட்வா புயல் இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக தொடர்ந்து நகர்ந்து, நவம்பர் 30 அன்று அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை எச்சரிக்கையையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சனிக்கிழமை யன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மோசமான பாதிப்பு: இதுவரை 61 பேர் பலி!

டிட்வா புயல் காரணமாக இலங்கை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளின் கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் நிலச்ச ரிவுகள் ஏற்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பி லிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்திய மலை மாவட்டங் களில் ஏற்பட்ட நிலச்சரிவு களில் 25-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர். பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, 20,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். பேரிடர் நிவாரண சேவைகளுக்காக இலங்கை அரசு ரூ. 120 கோடி (ரூ. 1.2 பில்லியன்) ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, இலங்கை கோரியதன் அடிப்படையில் கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலின் கடற்படை விமானங்கள் மற்றும் வீரர்கள் இலங்கைக்கு மீட்புப் பணிகளில் உதவி செய்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.